சீனாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் பரவும் கொரோனா வைரஸ்

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (1)
Advertisement

வாஷிங்டன் : கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் 9 பேர் பலியாகி உள்ள நிலையில், தற்போது அமெரிக்காவிலும் இநண்த வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.





சீனாவின் யுஹான் நகரில் நிமோனியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் மக்களிடம் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதவரை 291 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 54 பேர் இந்த வைரஸ் தொற்றிற்கான அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.





இந்நிலையில் யுஹானில் இருந்து வாஷிங்டன் வந்த ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எவரெட் பகுதியில் உள்ள மருத்துவ மையத்தில் அவர் தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக் கூடியது என்பதால் அமெரிக்காவில் வேறு யாருக்காவது இந்த வைரஸ் தொற்று உள்ளதா என கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
22-ஜன-202008:46:41 IST Report Abuse
blocked user பரவும் வேகத்தை பார்த்தால் சார்ஸை மிஞ்சிவிடும் போல இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X