காஷ்மீர் பிரச்னையை தீர்க்க தயார் : டிரம்ப்

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (19)
Advertisement

இந்த செய்தியை கேட்க

தாவோஸ் : இந்தியா - பாக்., இடையேயான காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதற்கு உதவ தயாராக உள்ளதாக அ மெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.





அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்னும் சில வாரங்களில் முதல் முறையாக இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார கூட்டத்தில் கலந்து கொண்ட டிரம்ப், பாக்,ல பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், காஷ்மீர் பிரச்னை குறித்தும், அது தொடர்பாக இந்தியா-பாக்., இடையேயான உறவு குறித்தும் பேசினோம். எங்களால் இந்த விவகாரத்தில் உதவ முடியும் என்றால், நிச்சயம் உதவுவோம். இந்த விவகாரத்தை மிக உன்னிப்பாகவும், நெருக்கமாகவும் கவனித்து வருகிறோம். இரு நாட்டு தலைவர்களும் விரும்பினால் நடுநிலையாக இருந்து காஷ்மீர் பிரச்னையை தீர்க்க தயாராக உள்ளோம் என்றார்.





பின்னர் பேசிய இம்ரான் கான், ஆப்கானிஸ்தான் போன்ற பிரச்னைகளையே நான் பேச விருபினோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக மீண்டும் காஷ்மீர் விவகாரம் குறித்தே பேசினோம். நிச்சயமாக இது மிகப் பெரிய பிரச்னை. இந்த விவகாரத்தை தீர்க்க அமெரிக்காவால் மட்டுமே முடியும் என நம்புகிறோம். வேறு எந்த நாட்டாலும் இதற்கு தீர்வு காண முடியாது என்றார். இந்தியாவிற்கு வரும் போது பாக்.,க்கு செல்வீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், இப்போது தான் சென்றோம். அதனால் இந்திய பயணத்தின் போது பாக்., செல்ல வாய்ப்பில்லை. ஆனால் இரு நாடுகளும் நல்ல நண்பர்கள். தொடர்ந்து சிறப்பான நட்புறவை தொடர விம்புகிறோம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
23-ஜன-202000:14:54 IST Report Abuse
Vena Suna ரெண்டு பூனைங்க ரொட்டிக்கு சண்டை போட்டுச்சாம். அதை சரி பண்ணறேன்னு குரங்கு வந்துச்சாம். இந்த பக்கம் கொஞ்சம் அதிகமா இருக்குன்னு குரங்கு கொஞ்சம் சாப்ட்டுச்சாம். அப்புறம்,அந்த பக்கம் கொஞ்சம் அதிகம்ன்னு சாப்ட்டுச்சாம்.இப்படி மொத ரொட்டியையும் குரங்கு சாப்பிட்டு ,பூனைக்கு நாமம் போட்டுச்சாம். டிரம்ப் தான் குரங்கு இங்க.
Rate this:
Share this comment
Cancel
srinivasan - chaennal,இந்தியா
22-ஜன-202019:44:32 IST Report Abuse
srinivasan It's already over. Please keep your post safe
Rate this:
Share this comment
Cancel
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
22-ஜன-202019:03:48 IST Report Abuse
Sukumar Talpady இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை தகராறு இருக்கிறதா என்று நம் பிரதமரிடம் கேட்ட இந்த அமெரிக்கா ஜனாதிபதி காஷ்மீரில் சமரசம் செய்ய தயாராம் . கேட்டாலே சிரிப்பு வர வில்லை ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X