வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: பிரிவினைவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றின் பின்னணியில் காங்., உள்ளதாக உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

லக்னோவில் சிஏஏ.,வுக்கு ஆதரவாக நடத்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய யோகி ஆதித்யநாத், நாட்டில் நடக்கும் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தின் பின்னணியில் காங்., உள்ளது.
பாரம்பரிய கட்சி எனக் கூறிக்கொள்ளும் காங்., செய்த பாவங்களுக்கு பா.ஜ., அரசு பரிகாரம் தேடி வருகிறது. நாட்டிற்கு தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை பா.ஜ., அரசு செய்து வருகிறது. காங்., மற்றும் பிற எதிர்க்கட்சிகள் ஓட்டு வங்கி அரசியலுக்காகவும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் பணியாற்றி வருகின்றன. ஆனால் பா.ஜ., அனைத்து வகையிலும் நாட்டை முன்னேற்ற முயற்சித்து வருகிறது.

காங்., நாட்டின் முன்னேற்றத்தை பார்க்கவில்லை. அதற்கு பதிலாக மக்களை தவறாக வழிநடத்தி, போராட்டத்திற்கு தூண்டிவிட்டு, வன்முறையை நிலைநாட்ட பார்க்கிறது. சிஏஏ.,க்கு எதிராக போராட்டம் நடத்த காங்., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் நிதி வழங்கி வருகின்றன. ஒரே நாடு என்ற மோடியின் கனவை நிறைவேற விடக் கூடாது என எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.
சிஏஏ.,க்கு எதிராக தவறான தகவல் பரப்புவதை பார்த்துக் கொண்டு எனது அரசு சும்மா இருக்காது. துரியோதனர்கள் போன்ற பிரிவினைவாதிகளை பார்த்துக் கொண்டு மக்களும் அமைதியாக இருக்க மாட்டார்கள்.
கடந்த 6 மாதங்களில் பெரிய மாற்றங்கள் வந்துள்ளதை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். காஷ்மீரில் 370 நீக்கப்பட்டது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, சிஏஏ கொண்டு வந்தது. இவற்றால் பல ஆழமான பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE