ரஜினி! வாயை மூடு; ஜெயக்குமார் 'சூடு'

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (246)
Advertisement
சென்னை: 1971ல் நடக்காத ஒரு விஷயத்தை பேசுவதற்குப் பதில் ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்க வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னையில் நடந்த 'துக்ளக்' வார இதழ் விழாவில், 1971ல் ஈ.வெ.ரா., நடத்திய பேரணி குறித்து துக்ளக் இதழில் செய்தி வந்ததாக பேசினார். ஆனால், தவறான கருத்தை பேசியதாக அவர் மீது புகார் கூறப்பட்டு, இதற்காக அவர் மன்னிப்பு கேட்க
JayaKumar, Rajinikanth, Thuglak, EVR, Periyar, Minister, ADMK, ஜெயக்குமார், ரஜினிகாந்த், துக்ளக், ஈவெரா, பெரியார், அமைச்சர், அதிமுக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: 1971ல் நடக்காத ஒரு விஷயத்தை பேசுவதற்குப் பதில் ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்க வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடந்த 'துக்ளக்' வார இதழ் விழாவில், 1971ல் ஈ.வெ.ரா., நடத்திய பேரணி குறித்து துக்ளக் இதழில் செய்தி வந்ததாக பேசினார். ஆனால், தவறான கருத்தை பேசியதாக அவர் மீது புகார் கூறப்பட்டு, இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் போர்க்கொடி தூக்கினர்.

இந்நிலையில், நேற்று (ஜன.,21) செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, நான் இல்லாதது எதையும் சொல்லவில்லை. 'அவுட்லுக்' என்ற பத்திரிகையில் வந்த செய்தியை தான் சொன்னேன். எனவே, மன்னிப்பு கேட்க முடியாது, என்றார். ரஜினியின் இந்த விளக்கத்திற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.


latest tamil news




இது குறித்து , அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈ.வெ.ரா., மதிப்புமிக்கவர். 1971ல் நடைபெறாத விஷயத்தை பேசி, மக்களை ரஜினி திசை திருப்பி மலிவான அரசியல் செய்யக்கூடாது. எந்த ஆதாயத்திற்காக நடக்காத ஒன்றை பேச வேண்டும்? தேவையில்லாத ஒன்றை பேசுவதற்கு முன்பாக ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்க வேண்டும்.

துக்ளக் பத்திரிகையில் வந்த செய்திக்கு அவுட்லுக் பத்திரிகை எப்படி ஆதாரமாக முடியும். ரஜினியை கண்டு திமுக.,வுக்கு வேண்டுமானால் பயமிருக்கலாம், அதிமுக.,வுக்கு பயமில்லை. எத்தனை ரஜினிகள் வந்தாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (246)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
28-ஜன-202018:16:16 IST Report Abuse
krish இவரை போன்ற, திராவிட, விஷ வித்துக்கள், நீர் தாமரை போல், காட்டு முள் செடிபோல், வளர்ந்து, படர்ந்து, தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க தமிழ் கலாச்சாரத்தை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றுகொண்டு இருக்கின்றன. இதுநாள் வரை, ரஜினி அவர்களும், அந்த சாக்கடை நீரோட்டத்தில் கலந்து, புலர்ந்து தன் திரையுலக செல்வாக்கை காப்பாற்ற அவர்களை ஆதரித்து வந்தது ஊர்/உலகம் அறிந்த உண்மை. தன் கவர்ச்சி ஸ்டைல் மூலம், இளைய தமிழ் மக்கள் மத்தியில் தாக்கத்தையும், தவறான போக்கையும் விளைவித்தது, கடந்தகாலம் அறிந்த எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையே. இன்று கவர்ச்சி அரசியல், மது, பிரியாணி, இலவசம், எங்கும் எதிலும் உழைப்பில்லா வருமானம் ஈட்டும் அரசு சலுகைகள் தான் மேலோங்கி, கோலோச்சி நிற்கின்றன. நர்த்தனம் ஆடுகின்றன. அவ்வை அன்று சொன்னது, ஆலயம் தொழுவது சாலவும் நன்று கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று வள்ளுவன் அன்று சொன்னது அகரமுதல எழுத்தெல்லாம், ஆதிபகவன் முதற்றே உலகு என்று ஆனால் பெரியார் பாதையில் வந்த, அவர் புகழ் பாடும் இந்த கூத்தாடி கூட்டம் கூச்சலிட்டு கூவுவது ஒன்றைத்தான்:- கடவுள் இல்லை, கடவுளை நம்பியவன் காட்டுமிராண்டி என்று. மாற்றான் தோட்டத்து மல்லிகை மணந்தால், மலர்ந்தால், கவர்ந்து, நுகர்ந்து, புணர்வதில் தவறில்லை என்று. இவர்கள் மாறப்போவதில்லை. தமிழகத்தை மாற்றப்போவதும் இல்லை. ஊழல், சுயநல பித்தம் தலைக்கு மேல் ஏறி விட்டது. எதை தேய்த்தால், பித்தம் தெளியும் - எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம். .
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
28-ஜன-202004:40:16 IST Report Abuse
N Annamalai இவர் எப்போதும் அவர் படம் ஓடுவதற்காக பேசுகிறார் .படம் இல்லாத போது சத்தம் இல்லாமல் ஷூட்டிங் போவார் .இப்போ இதில் எழுதியுள்ள 240 பேர் கூட ஓட்டு போட மாட்டார்கள் .(அதில் பாதி பேர் வெளிநாட்டில் இருப்பவர்கள் ).இவரை நம்ப முடியாது .
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
26-ஜன-202018:41:28 IST Report Abuse
karutthu ஒவ்வொரு வருடமும் துக்லக் ஆண்டுவிழாவில் பிரச்சினை வருகிறது .ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் பழ.கருப்பையா என்றவர் ஏடாகூடமா பேசி , பிறகு கட்சியிலிருந்து விலகி தி மு க விற்கு சென்று அங்கும் ஒன்னும் போனியாகவில்லை பிறகு பி ஜே பி செல்வதாக கூறி இப்போ காணாமல் போய்விட்டார் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X