முட்டாள்களின் வாரிசுகளே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்: கிரேட்டா மீது டிரம்ப் கடுப்பு

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (23)
Advertisement
DonaldTrump,  GretaThunberg, GlobalWarming, Foolishfortunetellers, ProphetsofDoom, Davos, டிரம்ப், கிரேட்டா, டொனால்ட்டிரம்ப், சுற்றுச்சூழல், ஆர்வலர்கள், வெப்பமயமாதல்,  முட்டாள்களின்வாரிசுகள், அழிவின்தீர்க்கதரிசிகள்

இந்த செய்தியை கேட்க

தாவோஸ்: புவி வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அதிகம் பேசுபவர்கள், முட்டாள்களின் வாரிசுகளாகவே இருக்க முடியும், என சர்ச்சைக்குரிய வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும், 'தாவோஸ்-2020' உலகப் பொருளாதார மன்றத்தின், 50வது கூட்டத்தில், 'புவி வெப்பமயமாதல்' குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதில், காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் பேசியதாவது: நம் வீடு (பூமி) இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது. நாங்கள் சுற்றுச்சூழலைக் காக்கப் போராடி வருகிறோம்.

தற்போது பருவநிலையும் சுற்றுச்சூழலுமே உலகின் மிக முக்கியப் பிரச்னையாக உள்ளது. பருவநிலை மாற்றத்தை முக்கியப் பிரச்னையாக அரசு கருதாதவரை, அதற்கு எந்த முடிவும் கிடைக்கப்போவதில்லை. மரங்களை நட்டால் மட்டும் சுற்றுச்சூழல் பாதிப்பு சரியாகாது. உலகத் தலைவர்கள், சுற்றுச்சூழலைக் காக்க நடவடிக்கை எடுப்பதாக வெற்று வார்த்தைகளை உதிர்த்து வருகின்றனர். உங்களை நம்பமாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.




இந்த நிலையில், நேற்று (ஜன.,21) , 'தாவோஸ் 2020' நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச இருந்தார். ட்ரம்ப் பேசுவதைக் கேட்க, மக்கள் கூட்டத்தில் கிரேட்டா அமர்ந்திருந்தார். டிரம்ப் பேசியதாவது: அழிவைக் கொண்டாடும் தீர்க்கதரிசிகள் கூறும் பேரழிவு பற்றிய கணிப்புகளை நாம் எப்போதும் நிராகரித்தாக வேண்டும். 'மக்கள் தொகை பெருக்கத்தால் நெருக்கடி ஏற்படும். மக்கள் பட்டினியால் உயிரிழப்பர். எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும்' என, அறிவியலாளர்கள் எச்சரித்தனர்.

ஆனால், அவர்களின் கணிப்பு அனைத்தும் பொய்த்துப் போனது. நம் வீடு எரிந்துகொண்டிருப்பதாக, கிரேட்டா தன்பெர்க் கூறுவதைக் கேட்க எனக்கு நேரமில்லை. புவி வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அதிகம் பேசுபவர்கள், முட்டாள்களின் வாரிசுகளாகவே இருக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.




புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பிரச்னையால் ஏற்பட்ட காட்டுத்தீயில், ஆஸ்திரேலியா கண்டமே இன்று எரிந்து வருகிறது. வெப்பத்தைக் கட்டுப்படுத்த அங்குள்ள ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலிய அரசு உத்தவிட்டுள்ளது. இதற்கு உலகம் முழுவதும் உள்ள, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில், காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்கை மட்டுமின்றி, ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும், 'முட்டாள்களின் வாரிசுகள்' என, டிரம்ப் விமர்சித்து இருப்பதற்கு, உலகம் முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
22-ஜன-202020:15:18 IST Report Abuse
Sampath Kumar சுப்பு நீ எத்தனை பேரை பாத்து இருக்கே ?? உங்கக்கிட்ட எத்தனை பேர் காசு கேட்டாங்க ? வாய்க்கு வந்தபடி பதிவு போடாதே ??? உன்ன மாதிரி ஆள்கள் இருப்பதால் தான் உண்மை சமூக ஆர்வலர்கள் குறைந்து போகிறார்கள்
Rate this:
Share this comment
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
23-ஜன-202014:51:54 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா சமூக ஆர்வலர் பியூஸ், போத்திசை மிரட்டி 7 லட்சம் வாங்குனது உலக பேமஸ். அணுவிஞ்சானி உதயகுமார் , காசுக்குதான் போராட்டம் பண்றோம்னு ஓத்துக்கிட்டு சர்ச் வழியே பணத்தை கொடுங்கன்னு பேசி ஒரு ஸ்டிங் ஒப்பரேஷன்ல மாட்டுனது இன்னொரு உலக பேமஸ்....
Rate this:
Share this comment
Cancel
சைவ வீரன் - Delhi,இந்தியா
22-ஜன-202020:06:35 IST Report Abuse
சைவ வீரன் இந்த காலநிலை ஆர்வலர் கிரேட்டா, How dare you? என்று சொன்னது உங்களுக்கு மரியாதையை குறைவாக தெரியவில்லையா? யார் இந்த கிரேட்டா? எப்படி இவருக்கு இந்த போ(பு)ராளி வேஷம்? இவர் ஒரு Asperger Syndrome குறைபாடு உள்ள குழந்தை என்பது எத்தனை பேருக்கு தெரியும். இங்கு ஒரு குழந்தையை முன்னிறுத்தினால் மட்டுமே எதுவும் பெரிய அளவில் பேசப்படும் என்பது நாம் கடந்து வந்த பாதை. வியட்நாம் போரை முடிவுக்கு கொண்டு வந்தது ஆடையில்லாமல் அழும் ஒரு குழந்தையின் படம். அதற்காகவே, இவர் சரியான முறையில் முன்னிறுத்த படுகிறார். ஆனால், இவர் பேசுவது நடைமுறையில் சாத்தியமே இல்லை. என் கணிப்பு சரியெனில், இவர் நடக்க போகும் பெரிய விளைவை திசை திருப்பவே, இவரின் இந்த போராட்டம் பூச்சாண்டி எல்லாம்.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
22-ஜன-202019:56:59 IST Report Abuse
Sanny செட்டிக்கு வேளாண்மை எட்டா பொருத்தம். ட்ரம்ப் ஐயாவுக்கு பொருந்தும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X