அரசியல் செய்தி

தமிழ்நாடு

பாஜ.,விடம் இருந்து விலக நேரம் பார்க்கிறோம்: அமைச்சர் பாஸ்கரன்

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (70)
Advertisement
Minister, Baskaran, BJP, Alliance, ADMK, CAA, அமைச்சர், பாஸ்கரன், அதிமுக, பாஜ, பாஜக, கூட்டணி, விலக, நேரம்

இந்த செய்தியை கேட்க

சிவகங்கை: பாஜ.,விடம் இருந்து விலகுவதற்கு நேரத்தை எதிர்பார்க்கிறோம் என அதிமுக அமைச்சர் பாஸ்கரன் பேசியதால், பாஜ., உடனான கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வெற்றிவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது பாஸ்கரன் பேசியதாவது: பாஜ.,விடம் இருந்து விலகி தனியாக செல்வதற்கான நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். எங்களின் அமைச்சரவையிலே எல்லாரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். நீங்கள் எங்களை ஒதுக்கி விட்டீர்களே தவிர நாங்கள் உங்களை ஒதுக்க மாட்டோம். நீங்கள் எம்எல்ஏ தேர்தலில் எங்களுக்கு ஓட்டுபோடவில்லை.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் எம்ஜிஆரின் 103 வது பிறந்தநாள் விழாவில், கதர் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் பங்கேற்றார். அவர் பேசுகையில், பிஜேபியிடம் இருந்து எந்த நேரமும், நாங்கள் தனியாக பிரிந்து செல்வதற்கு தயாராக, எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். எங்களின் அமைச்சரவையிலே எல்லாரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். மக்களாகிய நீங்கள் தான், எங்களை தேர்தலின் போது ஓட்டளிக்காமல், ஒதுக்கி விட்டீர்களே தவிர நாங்கள் உங்களை ஒதுக்க மாட்டோம் என்றார்.




இளையான்குடியில் திமுக கட்சியினரே ஆளுங்கட்சியினர் போல் நடந்து கொள்கிறார்கள். அந்த அளவிற்கு சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சாதாரண மனிதர்கள்; நீங்கள் எங்களை எப்போதும் வேண்டுமானாலும் அணுகலாம். எம்எல்ஏ, சேர்மன் மற்றும் என்னை சட்டையை பிடித்து கேட்கலாம். ஆனால், காங்கிரசையும் திமுகவையும் இதுபோல கேட்க முடியுமா, சந்திக்க முடியுமா, எங்கே இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியுமா. பாஜ.,வை வேண்டாம் என ஒதுக்கினாலும் நீங்கள் திமுகவிற்கு தான் ஓட்டுபோடுவீர்கள். இவ்வாறு பாஸ்கரன் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
23-ஜன-202014:41:04 IST Report Abuse
Swaminathan Chandramouli அம்மா அவர்கள் இருந்த இடம் இப்போது வெற்றிடமாகி விட்டதால் அதிமுக காக்காய்கள் மூலைக்கு மூலை கரைகின்றன அம்மா இருந்திருந்தால் இந்த பாஸ்கரன் போன்ற லாஸ்ட் பெஞ்ச் ஆட்கள் வாயினை திறக்க முடியுமா ? ஓ பன்னீர்செல்வம் பெரியாரின் கொள்கைகள் கோபுரத்தில் வைக்கப்பட்டு வணங்கப்படும் என்று தைரியமாக கூவ முடியுமா மேலும் ஓ பன்னீர் செல்வம் தைரியமாக பெரியாரால் தான் அவர் முன்னுக்கு வந்தார் என்று நாக்கை சுழற்ற முடியுமா " MGR in உப்பை தின்றுவிட்டு , அம்மா வின் காலில் விழுந்து , அம்மாவால் முதல் மந்திரி பதவியில் ஏற்றி வைக்கப்பட்ட இந்த ஓ பன்னீர் செல்வம் ஒரு நன்றி மறந்தவர் . என்னவோ பெரியாரை பற்றி ஓஹோ ஓஹோ என்று புகழ்கிறார் , இவர்கள் எல்லோரும் திமுகவின் ஸ்லீப்பர் செல்கள்
Rate this:
Share this comment
Cancel
23-ஜன-202013:31:53 IST Report Abuse
N.K (நான் தண்டக்கோண் இல்லை) ///இளையான்குடியில் திமுக கட்சியினரே ஆளுங்கட்சியினர் போல் நடந்து கொள்கிறார்கள். அந்த அளவிற்கு சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள்//// அதாவது ஆளும்கட்சின்னா சம்பாதிக்கணும். சம்பாதிச்சா ஆளும்கட்சி, அதுக்குதானே பதவி.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
23-ஜன-202011:21:52 IST Report Abuse
Nallavan Nallavan ஆப்பசைத்த குரங்கின் நிலைதான் அதிமுக -வின் நிலை ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X