பொது செய்தி

இந்தியா

தயாராகிறது சந்திரயான் 3: இஸ்ரோ சிவன்

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (7)
Advertisement

இந்த செய்தியை கேட்க

பெங்களூரு : சந்திரயான் 3 பணிகள் துவங்கப்பட்டு, முழு வீச்சில் நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.






மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, மனித ரோபோவை அனுப்பி ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 2022 ல் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கு முன் வியோமித்ரா என்ற பெண் உருவம் கொண்ட மனித ரோபோவை இஸ்ரோ அனுப்பகிறது.

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், சந்திரயான் 3 திட்டத்திற்காக 4 விண்வெளி வீரர்கள் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இம்மாத இறுதியில் ரஷ்யா செல்ல உள்ளனர். 1984 ல் ராகேஷ் சர்மா ரஷ்ய விண்கலத்தில் பறந்தார். ஆனால் இம்முறை, இந்தியாவில் இருந்து தயாரிக்கப்படும் இந்திய விண்கலத்தில் இந்திய விண்வெளி வீரர்கள் பறக்க உள்ளனர் என்றார். தொடர்ந்து மனிதர்களை நிலவுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளும் ஏவுகணையை இஸ்ரோ அனுப்புமா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கண்டிப்பாக ஒருநாள் அனுப்பப்படும். ஆனால் உடனடியாக அல்ல என்றார்.




மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, மனித ரோபோவை அனுப்பி ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 2022 ல் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கு முன் வியோமித்ரா என்ற பெண் உருவம் கொண்ட மனித ரோபோவை இஸ்ரோ அனுப்ப உள்ளது.

இந்த மனித ரோபோ 2 மொழிகளில் பேசுவது உள்ளிட்ட பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இது போன்ற பல மனித ரோபோக்களை அறிமுகம் செய்து, விண்வெளி ஆய்வுக்கு இஸ்ரோ பயன்படுத்த உள்ளது. முதலில் ஆளில்லாமல் விண்கலம் அனுப்பவும், பிறகு மனித ரோபோக்களை பயன்படுத்தி விண்கலங்களை அனுப்பி சோதிக்க உள்ளதாகவும் இஸ்ரோ சிவன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொடுக்கு - Ang Mo Kio ,சிங்கப்பூர்
22-ஜன-202021:22:01 IST Report Abuse
கொடுக்கு நீங்களும்,, மோடியும் ஒரு ஓரமா போயி விளையாடுங்க சார்
Rate this:
Share this comment
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
22-ஜன-202021:14:37 IST Report Abuse
mrsethuraman  ஏற்கனேவே சந்திராயன் 2 நம்ம ஊரு டவுன் பஸ் போல பாதியிலே பிரேக் டவுன் ஆகி நின்று விட்டது .சுகன்யான் வெற்றி அடையட்டும் .
Rate this:
Share this comment
Cancel
RAMAKRISHNAN NATESAN SIRUSERI - CHENNAI ,இந்தியா
22-ஜன-202019:28:51 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN  SIRUSERI         இஸ்ரோவின் தலைவர் கே.சிவன் இந்த மனிதரோபோவான வியோமமித்ரா குறித்துக் கூறுகையில், " விண்வெளியில் மனிதர்கள் செயல்பாட்டைத் தூண்டிவிடும் வகையில் இந்த ரோபோ செயல்படும், அதுமட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் கட்டுப்படுத்தும் உயிர்காக்கும் முறையோடு தொடர்பு கொள்ளும் . விண்வெளியில் மனிதர்கள் செயல்பாட்டை இந்த ரோபோ தூண்டிவிட்டு, செயல்பாட்டு முறை சரியாக இருக்கிறதா என்பதைக் கண்காணிக்கும்" எனத் தெரிவித்தார்:: இந்த திராவிடர் செயல் மெச்சத்தக்கது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X