அரசியல் செய்தி

தமிழ்நாடு

2020 திமுக.,விற்கு தேர்தல் ஆண்டு: ஸ்டாலின்

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (70)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை : 2020 ம் ஆண்டு திமுக.,வை பொறுத்தவரை தேர்தல் ஆண்டு. இந்த ஆண்டில் எப்படி தீவிரமாக செயல்படுகிறோமோ அதன் பலனை 2021 ல் பெறலாம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.





ஸ்டாலின் இன்று (ஜன.,22) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: கட்சிக்குள் நடைபெறும் பிரச்சனைகளை தீர்க்க நிர்வாகிகள் முயற்சிக்க வேண்டும். சில பிரச்சனைகளை தலைமையால் தான் தீர்க்க வேண்டுமென்றால், அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்னைகளை தீர்க்க அவசியமான ஆபரேஷனை செய்து தான் ஆக வேண்டும்.




அதேநேரம், தனிமனிதனின் விருப்பு வெறுப்பு மற்றும் சுயநலத்தை விட இயக்கத்தின் வெற்றியே முக்கியம். தனிப்பட்ட முறையில் சிலர் தவறு செய்தால் அவர்களை காப்பாற்ற முயற்சிக்க கூடாது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற புதியவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

அவர்களை அடிமைகளாக நடத்திட கூடாது. 9 ஆண்டுகளாக நாம் ஆட்சியில் இல்லை. இன்னும் ஓராண்டு காலத்திற்குள் மீண்டும் திமுக ஆட்சி மலரும். யாரையும் எதிர்கொள்ளும் வலிமையும், வாய்மையும் திமுக.,வுக்கு இருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உள்ளது.




ஜன.,31ல் திருச்சியில் நடக்கும் மாநாடு, திமுக.,வரலாற்றில் பெரிய திருப்புமுனையாக அமையும். நமது வெற்றிப்பாதையில் குறுக்கிடக்கூடிய தடைகளை பக்குவமாக தகர்த்தெறிந்து முன்னேறிடும் ஆற்றல் உங்களிடம் உண்டு. உள்ளாட்சி தேர்தல் களத்தில் 2020 வெற்றி. அதனைத் தொடர்ந்து 2021ல் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திடும் வகையில் திமுக.,வின் வெற்றி தொடர்ந்து கொண்டே இருக்கும். இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
23-ஜன-202015:45:00 IST Report Abuse
Swaminathan Chandramouli ஸ்டாலின் அவர்களே உங்கள் பார்யாளை கோவிலுக்கு போகாதே என்று உம்மால் தடுக்க முடிகிறதா , தமிழ்நாடு ஆந்திரா உள்பட்ட எல்லா கோயிலுக்கும் சென்று பூஜைகள் செய்து பிரசாதம் பெற்று இரவு நேரத்தில் உம்முடைய நெற்றியில் விபூதி குங்கும பிரசாதத்தை விட்டுவிடுகிறார் திருமதி துர்க்கா ஸ்டாலின் அவர்கள் . இதை உம்மால் மறுக்கமுடியுமா
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
23-ஜன-202010:07:33 IST Report Abuse
narayanan iyer பெரியார் , தி .க , தி மு க . என்று இவர்களால் இந்தனை ஆண்டுகாலம் உரக்க கத்தி கூச்சல் போட்டாலும் மக்களின் பக்தி கூடித்தானே வருகிறது. முன்னெல்லாம் சங்கடஹரசதுர்த்தி , பிரதோஷம் போன்ற வழிபாடுகளின்போது மக்களின் கூட்டம் இல்லவே இல்லை . ஆனால் இன்று கோவிலின் பெருக்கம் . வழிபாடுகள் நேர்த்தியாய் நடக்கிறது. எப்படி ? மக்கள் அவர்களின் கட்சியில் இருந்தாலும், தலைவர் சொன்னாலும் ஏன் தலைவரின் குடும்பமே கேட்பதில்லை . இறைவணக்கமும் , பக்தியும் வளர்ந்துகொண்டுதானே இருக்கிறது .இந்த லக்ஷ்ணத்தில் இந்த வகையான கடவுள் இல்லை பிரச்சாரத்தை நிறுத்திவிடலாம் . ஆனாலும் அவர்களுக்கும் வேலை வேண்டுமே இந்த மக்கள் இந்த கட்சிகளுக்கு இனியும் ஓட்டுபோடவேண்டாம் என்று சிரம்தாழ்த்தி வேண்டுகிறேன் .
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23-ஜன-202009:19:42 IST Report Abuse
Natarajan Ramanathan தீயசக்தியின் தீயமுகவுக்கு இரண்டாவது திவசம்தான் வரும். வேறு ஒன்றும் வராது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X