இந்தியாவை எதிர்க்க யாருக்கும் தைரியம் இல்லை: ராஜ்நாத்சிங்

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (18)
Advertisement
RajnathSingh, DefenseMinister, Courage, IndiaChina, Border, Theocratic, Secular, ராஜ்நாத்சிங், பாதுகாப்புஅமைச்சர், தைரியம், இந்தியாசீனா, எல்லை, பாதுகாப்பு, மதசார்பு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: இந்தியாவை எதிர்க்க எந்த நாட்டுக்கும் தைரியம் இல்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.,)குடியரசு தின விழா முகாமுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நமது அண்டை நாடுகள் மதத்தின் அடிப்படையிலானது என பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளன. அமெரிக்காவும் மதசார்புள்ள நாடு தான். ஆனால், இந்தியா மட்டுமே மதச்சார்புள்ளது என அறிவிக்கவில்லை. ஏனென்றால், நாம் மதங்களில் பாகுபாடு காட்ட மாட்டோம் என கூறியுள்ளோம்.

நம்முடைய சாதுக்கள், துறவிகள் என அனைவரும், எல்லைக்குள் வாழும் மக்களை குடும்பத்தின் ஒரு பகுதியாக பார்க்காமல், உலகில் வாழும் அனைவரையும் ஒரே குடும்பமாக கருதுகின்றனர். எனவே தான் இந்தியா மதச்சார்பற்ற நாடாக திகழ்கிறது. இந்தியாவில் எல்லா மதங்களும் சமம்; அனைத்து மதத்தினரும் இங்கு வாழலாம்.




ஜம்மு-காஷ்மீரில் உள்ள குழந்தைகளும் தேசியவாதிகள் தான்; அவர்களை வேறு விதமாக பார்க்கக் கூடாது. சில நேரங்களில், மக்கள் அவர்களை சரியான வகையில் ஊக்கப்படுத்துவதில்லை, தவறாக வழிநடத்துகிறார்கள். அவர்களை தவறாக வழிநடத்துபவர்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

இந்தியா-சீன எல்லையில் சீன ராணுவத்தினரால் பிரச்னைகள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கும் அங்குள்ள மக்கள் கவலைப்பட வேண்டாம். நமது எல்லைகளை பொறுத்தவரை, நமது படைகளின் மீது நம்பிக்கை வையுங்கள். அவர்கள் கவனித்து கொள்வார்கள். இந்தியாவை எதிர்க்க எந்த நாட்டுக்கும் தைரியம் இல்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.




Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
23-ஜன-202017:41:35 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி சென்ற 6 வருடங்களுக்கு முன் இருந்த ராணுவ அமைச்சர்களின் பேச்சையும் கேட்டிருக்கிறேன். நம்மைச் சீண்டியவர்கள் யாரென்றதே சொல்லாமல் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்பார்கள். அதுவும் சைனாவாக இருந்தால் வெறும் செய்தியாக மட்டுமே சீன ஆக்கிரமிப்பு இருக்கும் . அரசின் பதில் வெறும் மவுனம் தான்.ஆனால் இன்று?பாகிஸ்தானின் பிரத(ம)ரும் ராணுவத் தலையும் ஒப்பாரி வைத்துக்கொண்டும் அமெரிக்காவைப் பார்த்துக் கொண்டுமிருக்கிறார்கள். சப்பை மூக்கனோ முன்பு ஆடியதை இப்போது ஆட முடியவில்லையே என்று புழுங்கிக் கொண்டு சும்மாங்காட்டியும் விளையாட்டுக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் டோக்லாம் படுத்தும்பாடு.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-ஜன-202002:20:36 IST Report Abuse
தமிழ்வேல் இந்தியா பலமான நாடுதான்... ஆனால், இது "தேவையற்ற" ஆணவப் பேச்சு.
Rate this:
Share this comment
Cancel
Murugaiyapillai Vedaraju - Chennai,இந்தியா
22-ஜன-202021:19:09 IST Report Abuse
Murugaiyapillai Vedaraju ஏன்யா உசுப்படுத்துகிறீர்கள்? ரணகளத்தை பார்க்க அப்படி என்ன ஆவல் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X