பொது செய்தி

இந்தியா

நித்யானந்தாவுக்கு எதிராக இன்டர்போல் நோட்டீஸ்

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (13)
Advertisement
Nithyananda, interpol, bluecorner, Notice, Bluecornernotice, Gujaratpolice, police, நித்யானந்தா,நித்தியானந்தா, குஜராத்,குஜராத்போலீஸ், இண்டர்போல், இன்டர்போல், புளூகார்னர்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா மீது புளூகார்னர் நோட்டீஸ் பிறப்பித்து இன்டர்போல் உத்தரவிட்டுள்ளது. புளூகார்னர் நோட்டீஸ் என்பது, குற்றவாளி இருக்கும் இடத்தை உறுப்பு நாடுகள் பகிர்ந்து கொள்வது கட்டாயமாகிறது என்பதை குறிக்கும்.

சர்சைக்குரிய சாமியார் நித்யானந்தா மீது , கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் பாலியல் மற்றும் ஆள்கடத்தல் புகார்கள் உள்ளன. தொடர்ந்து அவர் தலைமறைவாக, அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது. 2018 ல் முடிவடைந்த பாஸ்போர்ட்டை புதுப்பிக்க நித்யானந்தா அளித்திருந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது. ஈக்வடார் நாட்டில் நித்யானந்தா தஞ்சடைந்ததாக தகவல் வெளியானது. ஆனால், இதனை அந்நாடு மறுத்துவிட்டது. தென் அமெரிக்க பகுதிகளில் எந்த தீவையும் அவர் வாங்க உதவி செய்யவில்லை என விளக்கமளித்தது. ஈக்வடார் அருகேயுள்ள ஒரு தீவை வாங்கி கைலாசா என பெயரிட்டு சொற்பொழிவாற்றி வருவதாக தகவல்கள் வந்தன.

கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்தல் போன்ற குற்றங்கள் தொடர்பாக நித்யானந்தாவை கண்டுபிடித்து தரும்படியும், இதற்காக அவருக்கு எதிராக புளூகார்னர் நோட்டீஸ் வழங்கும்படியும் சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்டர்போலுக்கு குஜராத் போலீசார் கடிதம் எழுதினர்.





இதனை ஏற்று கொண்ட நித்தியானந்தாவுக்கு எதிராக புளூகார்னர் நோட்டீஸ் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
26-ஜன-202015:51:28 IST Report Abuse
kalyanasundaram to locate him catch ranjitha his heart throb may be.
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
23-ஜன-202011:29:24 IST Report Abuse
M.COM.N.K.K. சிறுமிகளை சித்திரவதை செய்ததை நம்ப தி க ஆதரிக்குமே அப்போ தி க வக்கீல் சாமியாருக்காக வாதாடுவார்போல.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
23-ஜன-202010:44:12 IST Report Abuse
A.George Alphonse இந்த போலி சாமியார் இதுபோன்ற நோட்டிஸ்க்கெல்லாம் பயப்படமாட்டார். ஒரு தனி மனிதன் நம் நாட்டுக்கே அல்வா கொடுத்து விட்டு தினமும் திமிருட னும், ,தெனாவெட்டாக வீடியோ வெளியிடுவது மிக மிக கேவலமானது.உலகம் இதுபோன்ற போலிசாமியார்களுக்கும், பணக்காரர்களுக்கும் மட்டுமே தகுந்ததும், உகந்ததும் ஆகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X