டில்லியை அண்ணனைப் போல் பார்த்தேன்: 'ஐஸ்' வைக்கும் அரவிந்த் கெஜ்ரி

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (16)
Advertisement
DelhiElection, ArvindKejriwal, ElderSon, AAP, Delhi, CM, Roadshow, டில்லி, தேர்தல், அரவிந்த்கெஜ்ரிவால், மூத்தஅண்ணன், ஆம்ஆத்மி, முதல்வர்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லியை ஒரு குடும்பத்தின் மூத்த அண்ணனை போல பார்த்துக்கொண்டேன் என தேர்தல் பிரசாரத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. அங்கு மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான டில்லி சட்டசபைக்கு, பிப்ரவரி, 8ம் தேதி, தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை பிப்.,11ல் நடக்கிறது. தேர்தல் நெருங்கி வருவதால், கட்சிகள், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுடில்லி தொகுதியில் போட்டியிடும் கெஜ்ரிவால், பட்லி பகுதியில் ராஜேஷ் யாதவ் எம்எல்ஏ.,வுக்காக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:




கடந்த 5 ஆண்டுகளில் அதிகமானதை நிறைவேற்றியுள்ளோம். டில்லியை குடும்பத்தின் மூத்த அண்ணனைப் போல் பார்த்துக்கொண்டேன். மாநில வளர்ச்சி பணிகள் முடங்காமல் இருக்க ஆம்ஆத்மி கட்சிக்கு ஓட்டளியுங்கள். எங்களை தவிர வேறு யாராவது ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், பள்ளி மற்றும் மருத்துவமனைகளின் நிலை மீண்டும் மோசமடையும். எனவே, வளர்ச்சிக்கும், அதற்காக உழைப்பவர்களுக்கும் ஓட்டளியுங்கள். இந்த சூழ்நிலையில், நாங்கள் சாதாரண மக்களுக்கு சிறிது நிவாரணம் வழங்க முடிகிறது என நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
23-ஜன-202011:17:45 IST Report Abuse
M.COM.N.K.K. நல்லது இன்னும் கொஞ்சம் கூடுதலாக பேசி இருக்கலாம் அக்காவைப்போல் என்று ஒரு வார்த்தையையும் சேர்த்திருக்கலாம். கொஞ்சம் கூடுதல் பலன் கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Kannan - Chennai,இந்தியா
23-ஜன-202011:09:10 IST Report Abuse
Kannan இதிலிருந்து ஒன்று தெரியுமா? சண்டையே அன்னன் தம்பிக்கு இதேயே தான். பங்காளி சண்டை. எனவே இவருக்கு வோட்டை போடுவது நல்லதா என்று யோசிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
King of kindness - muscat,ஓமன்
23-ஜன-202009:37:51 IST Report Abuse
King of kindness "அண்ணே நீங்க எவ்வளோ நல்லவரு" என்று செந்தில் ஒரு படத்தில் கவுண்டமணியை பார்த்து சொல்வார். கேஜ்ரிவால் அதை ஞாபக படுத்துகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X