நாளை தீரர் -நேதாஜியின் 124 வது பிறந்த நாள்| chennai | Dinamalar

நாளை தீரர் -நேதாஜியின் 124 வது பிறந்த நாள்

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020
Share
latest tamil news


"என்னால் உங்களுக்கு என்ன அளிக்க முடியும்? பசி, பட்டினி, தாகம், மரணம்தான். ஆனால் ஒன்றுமட்டும் உறுதி. நீங்கள் என்னைப் பின்தொடர்ந்தால் நான் உங்களைச் சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்வேன். எதனை பேர் பிழைப்போம் என்று தெரியாது. போராடத் தாராகுங்கள்" என்றவர்.


latest tamil news“கடவுளின் பெயாரால், இறந்து போன தியாகிகளின் பெயரால், இந்த புனிதமான பதவியை ஏற்றுக்கொள்கிறேன், இந்தியாவை விட்டு அன்னியப் படைகளை விரட்டுவது தான் அரசின் முதல் நோக்கம். சுபாஷ் சந்திர போஸ் ஆகிய நான் என் இறுதி மூச்சு உள்ளவரையில் இந்தப் படையை முன்னெடுத்துச் செல்வேன் என்று உறுதியளிக்கிறேன். சுதந்திரத்திற்கு பிறகும், என்னுடைய கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை இந்திய சுதந்திரத்தைப் பாதுகாக்க உழைப்பேன். ஜெய் ஹிந்த்”.


latest tamil newsஇப்படி எல்லாம் முழங்கிய மாவீரர் நேதாஜியின் பிறந்த நாள் இன்று.


latest tamil news


அவரிடம் மன உறுதியைத் தவிர என்ன இருந்தது.ஆனால் அவர்தான் எல்லாமே என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது.அவர் கேட்டால் காதில் கையில் போட்டு இருந்ததை எல்லாம் கழட்டி நிதியாகக் கொடுக்கும் தன்மை நிறைந்திருந்தது.
நாட்டின் விடுதலைக்காக அவர் நாடு நாடாக ஆதரவு வேண்டி சுற்றினார் இப்போது கூட இப்படி ஒரு தலைவர் நம்மோடு நமக்காக இருந்தார் என்பதை நம்பமுடியாது ஆனால் வரலாற்று சுவடுகளில் பார்த்தால் இவர் பாதம் பதிக்காத நாடுகள் இல்லை இவரை பற்றி எழுதாத ஏடுகள் இல்லை.
மூன்று மாதங்கள் நீர்முழ்கி கப்பலிலேயே பயணம் செய்திருக்கிறார் எல்லோரும் இறந்துவிட்டார் என்று எண்ணிக்கொண்டு இருந்த வேளையில் நான்தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேசுகிறேன் உயிரோடுதான் இருக்கிறேன் என்று வானோலியில் பேசியவர் .
அவரது போராட்டம் மிகக்கொடுமையானது மட்டுமல்ல கடுமையானதும் கூட.கொட்டுகின்ற மழையில் பசி பஞ்சத்துடன் போதுமான ஆயுதங்கள் இன்றி போராடினார்கள்.பலர் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் வருவதை முன்கூட்டியே காட்டிக் கொடுத்தனர் இதனால் குண்டடிபட்டு கொத்து கொத்தாக நம் வீரர்கள் செத்து மடிந்தனர்.மக்கள் ஆதரவை மட்டுமே முன்வைத்து சென்று முதல் வெற்றியை தொட்டார் ஆனால் தொடர்ந்து வெற்றியை தொடரமுடியாத அளவிற்கு நிலமை மோசமானது.
"இதற்கு முன் நாம் அறிந்திடாத நெருக்கடியில் நாம் இருக்கிறோம். நான் உங்கள்அனைவருக்கும் சொல்ல விரும்புவது இதைத்தான்.நாம் நம்பிக்கையை ஒருபோதும் இழக்கவேண்டாம். இந்த உயிர் இன்னும் நம்உடலில் இருக்கிறது. ஜெய் ஹிந்த்" என்று அந்த நிலையிலும் பேசினார்.
ஜப்பானின் ஆதரவைப் பெற அவசரப்பயணம் மேற்கொண்டார். நேதாஜியுடன் இரு படைத் தளபதிகள் குண்டு வீசும் விமானத்தில்பாங்காக்கில் தரை இறங்குகிறார்கள். ஆகஸ்ட் 17, பாங்காக்கில் இருந்துசாய்கொனுக்கு செல்கிறார் அதுதான் அவரை எல்லோரும் கடைசியாகப் பார்த்து.மறு நாள் விமான விபத்தில் போஸ் இறந்து விட்டதாகச் செய்தி...என்ன நடந்தது........ இன்று வரை தெரியவில்லை.......
போஸ் விவகாரத்தை ஆராய அமைக்கப்பட்ட ஒவ்வொரு கமிஷனும் ஒவ்வொருவிதமான முடிவை முன் வைக்கிறது இந்த நிமிடம் வரை போஸ் ஒரு புதிர்.அவிழ்க்கப்படாத மர்மம்.
அவருக்கு சிங்கப்பூரிலும் ரங்கூனிலும் துவங்கி அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு ஆதரவளித்தது தமிழினமே இதன் காரணமாக சிங்கப்பூரில் தனது ஆங்கில உரையை தமிழில் மொழி பெயர்த்தால் போதும் என்று சொன்னவர் அடுத்த ஒரு பிறவி என்று ஒன்று உண்டென்றால் தமிழகத்தில் தமிழனாக பிறக்கவேண்டும் என்று விரும்பியவர் அந்த தலைவரின் பிறந்த நாளில் அவர் அடியொற்றி வாழ முற்படுவோம் ஜெய்ஹிந்த்.
எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X