துாக்கு தண்டனை இழுபறி: மத்திய அரசு வழக்கு

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (21)
Advertisement
Centre, SupremeCourt, VictimCentric,Rule,DeathPenalty, தூக்குதண்டனை, குற்றவாளி, மறுசீராய்வு, மத்தியஅரசு, உச்சநீதிமன்றம், சுப்ரீம்கோர்ட்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: 'துாக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு, அதை நிறைவேற்றுவதற்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்-' என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

டில்லியில், 2012ல் நடந்த, மருத்துவ மாணவி 'நிர்பயா' பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஆனால், சீராய்வு மனு, மறுசீராய்வு மனு, கருணை மனு என, ஒவ்வொருவரும் தனித்தனியாக விண்ணப்பங்களை அளித்து வருகின்றனர்.இதனால், துாக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம், 'வாரன்ட்' பிறப்பித்தும், தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. தற்போது, பிப்., 1ம் தேதி தண்டனையை நிறைவேற்ற, வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.





இந்த நிலையில், மத்திய அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது:ஒரு வழக்கில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள், பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து, வேண்டுெமன்றே தண்டனை நிறைவேற்றுவதை இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.தண்டனையை நிறைவேற்றுவதற்கு, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். இது தொடர்பாக, அனைத்து நீதிமன்றங்கள், மாநில அரசுகள், சிறை நிர்வாகங்களுக்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பிறகு, மறு சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கும், அதன்பிறகு கருணை மனுவை தாக்கல் செய்வதற்கும் கால நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுவிட்டால், அதற்கு ஏழு நாட்களுக்குள் கருணை மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.அதேபோல், கருணை மனு நிராகரிக்கப்பட்டால், அடுத்த ஏழு நாட்களுக்குள் தண்டனையை நிறைவேற்ற வேண்டும். வழக்கின் மற்ற கைதிகளின் மனுக்கள் எந்த நிலையில் இருந்தாலும், அதற்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
lalithavani - Varanasi,இந்தியா
23-ஜன-202017:16:52 IST Report Abuse
lalithavani இதே போல் உன்னாவ் மற்றும் கத்துவா சம்பவங்களில் சம்மந்தப்பட்ட ஆளுங்கட்சி காரர்களுக்கும் வரையறை கொண்டு வந்து உடனடியாக தூக்கிலிட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
lalithavani - Varanasi,இந்தியா
23-ஜன-202017:14:08 IST Report Abuse
lalithavani அடப்பாவிகளா, இதிலும் அரசியலா கடந்த சில நாட்களாக ட்ல்லி தேர்தல் பிரசாரத்தில் இது பற்றியும் பேசப்படுவதை பார்த்தால், அதையும் அரசியல் ஆதாயத்துக்காக செய்யற மாதிரி இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
23-ஜன-202009:50:21 IST Report Abuse
S.Baliah Seer ஆறிய சாதம் பழைய சாதம், இழுத்தடிக்கப்பட்ட வழக்குகள் உரிய பலனை தராது .மனித மிருகங்களை கொல்ல பச்சாதாபப் படுபவர்கள் ஒரு பாவமும் செய்யாத பிராணிகளை கொன்று தின்றுவிட்டு கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்று கதை பேசும் காலம் இது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X