சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ., விசாரணைக்கு பரிந்துரை

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 22, 2020
Advertisement
 எஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ., விசாரணைக்கு பரிந்துரை

சென்னை:'சிறப்பு எஸ்.ஐ., வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டது; பெங்களூரில் பயங்கரவாதிகள் சிக்கியது; அவர்களுக்கு காஞ்சிபுரத்தில், 'சிம்கார்டு' வாங்கி கொடுத்தது என, அனைத்து வழக்குகளையும், தேசிய புலனாய்வு நிறுவன விசாரணைக்கு மாற்ற வேண்டும்' என, மத்திய அரசுக்குதமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் நிலையத்தில், சிறப்பு எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் வில்சன், 57. இவர், கடந்த, 8ம் தேதி இரவு, தமிழக - கேரள எல்லையில் உள்ள, சோதனை சாவடியில் பணியில் இருந்தார். அங்கு சென்ற இரண்டு பேர், வில்சனை துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொன்றனர்.
இந்த கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளான, கன்னியாகுமரி மாவட்டம், அடப்புவிளையை சேர்ந்த அப்துல் சமீம், 29; நாகர்கோவில் கோட்டார் மாலிக் தினார் நகரை சேர்ந்த தவுபீக், 27, ஆகியோரை கர்நாடக போலீசார் கைது செய்தனர். பின், தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இவர்கள் மீது, கொலை, கொலை மிரட்டல் மற்றும் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு பிரிவு என்ற, 'உபா' சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும், கன்னியாகுமரி மாவட்ட போலீசார், 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல, பெங்களூரில் பதுங்கி இருந்த, இவர்களின் கூட்டாளிகளான முகமது ஹனீப் கான், 29; இம்ரான் கான், 32; முகமது ஜெயித், 24; இஜாஸ் பாஷா, 46; மெகபூப் பாஷா, 46; உசேன் ஷெரீப், 32, ஆகியோரை, தமிழக, 'கியூ' பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களுக்கு தலைவராக செயல்பட்ட, காஜா மொய்தீன், 47, சையது அலி நவாஸ், 25 ஆகியோரை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கு, போலி ஆவணங்கள் வாயிலாக, மொபைல் போனுக்குரிய, 'சிம்' கார்டுகளை வாங்கி கொடுத்தாக, ஆறு பேர், என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளிடம் சிக்கி உள்ளனர். இவர்கள் அனைவரும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன், நேரடி தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், குடியரசு தின விழாவை சீர்குலைக்க, தென் மாநிலங்களில், தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில், தற்கொலை படை மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததும் கண்டறியப்பட்டு உள்ளது.
இதனால், பயங்கரவாதிகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும், தேசிய புலனாய்வு நிறுவனத்தின் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என, மத்திய அரசுக்கு, தமிழக அரசு சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர் மீது, 'உபா' சட்டம் பாய்ந்துள்ளதால், இருவரிடமும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரிப்பர். கைதாகியுள்ள பயங்கரவாதிகளிடம் அவர்கள் விசாரணை நடத்தினால், தலைமறைவாக உள்ள, பயங்கரவாதிகளை விரைவில் கைது செய்து விடலாம்.
எனவே, பயங்கரவாதிகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும், தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு மாற்ற, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்
***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X