காஷ்மீர் பிரச்னையில் உதவ தயார் :டிரம்ப் மீண்டும் பழைய பல்லவி

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (4+ 20)
Advertisement
காஷ்மீர், பிரச்னை, பாக்., உதவ_ தயார்,டிரம்ப், இம்ரான்,  பல்லவி

டாவோஸ்: ''ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் பேசினேன்; இந்தப் பிரச்னையில், என்னால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

'ஜம்மு - காஷ்மீர் பிரச்னை, இந்தியா - பாகிஸ்தான் இடையிலானது; இதில், மூன்றாவது நாடு தலையிடத் தேவையில்லை' என, இந்தியா பல முறை தெரிவித்து உள்ளது.எனினும், இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என, ஐ.நா., சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிடம், பாகிஸ்தான் தொடர்ந்து கெஞ்சி வருகிறது.

'காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு, பிரதமர் மோடி என்னிடம் கோரினார்' என, கடந்த ஆண்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி, சிக்கலில் மாட்டினார். இப்போது, காஷ்மீர் பிரச்னையில் உதவத் தயார் என, மீண்டும் கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார அமைப்பின், 50ம் ஆண்டு மாநாடு, நேற்று முன்தினம் துவங்கியது. நான்கு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில், 53 நாடுகளின் தலைவர்கள், 118 நாடுகளைச் சேர்ந்த, 3,000க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்பும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் சந்தித்துப் பேசினர்.

இம்ரான் கானுடனான சந்திப்பு குறித்து, டிரம்ப் கூறியதாவது:பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்துப் பேசினேன். அப்போது, இருவரும் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினோம்; இந்தியா - பாகிஸ்தான் நட்புறவு பற்றியும் கேட்டறிந்தேன். காஷ்மீர் பிரச்னையை, அமெரிக்கா தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில், அமெரிக்கா தலையிட்டு தீர்வு காண வேண்டும் என, இம்ரான் கான் என்னிடம் கேட்டுக் கொண்டார்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை, இது மிகப் பெரிய விவகாரம். இந்த விஷயத்தில், எங்களால் முடிந்தால் உதவி செய்ய தயார் என, இம்ரான்கானிடம் தெரிவித்தேன். பாக்., - அமெரிக்கா இடையிலான நட்புறவு, முன் எப்போதும் இல்லாத அளவில் நெருக்கமாக உள்ளது. இரு தரப்பு நாடுகளின் வர்த்தகத்தை வளர்ப்பது முக்கியம், அதற்கு அதிகமான முன்னுரிமை அளிப்பது அவசியம் என, கருதுகிறேன். இந்தியா வரும் போது, பாகிஸ்தான் செல்லும் திட்டம் ஏதும் இல்லை. இவ்வாறு, அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.


நம்பிக்கையை இழந்து விட்டது பாக்.,



'பாகிஸ்தான், பயங்கரவாதத்துக்கு தொடர்ந்து மறைமுக ஆதரவு அளித்து வருவதால், காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நம்பகத் தன்மையை, அது இழந்துவிட்டது' என, அமெரிக்க பார்லிமென்டில், சி.ஆர்.எஸ்., எனப்படும், காங்கிரஸ் ஆய்வு சேவை அமைப்பு, தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின், சி.ஆர்.எஸ்., காஷ்மீர் விவகாரம் குறித்து, தன் இரண்டாவது அறிக்கையை, சமீபத்தில், அமெரிக்க பார்லி.,யில், தாக்கல் செய்துள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:இந்திய அரசு, ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின், அதற்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு, பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், இந்தியாவுக்கு எதிராக, சர்வதேச அளவில் ஆதரவு திரட்ட, பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், இந்தியாவோ, 'இது எங்களின் உள்நாட்டு விவகாரம்' என்பதில் உறுதியாக உள்ளது.

இந்த விவகாரம் பற்றி விவாதிக்க, கடந்த ஆண்டு, ஆகஸ்ட், 16ல், சீனா ஆதரவுடன், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை, பாகிஸ்தான் கூட்டியது. காஷ்மீர் விவகாரம் குறித்து, 50 ஆண்டுகளுக்குப் பின், பாதுகாப்பு கவுன்சில் இப்போது தான் விவாதித்தது. ஆனால், எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. சர்வதேச அளவில், துருக்கியைத் தவிர வேறு எந்த நாடும், பாகிஸ்தானுக்கு உறுதியாக ஆதரவு தரவில்லை.

பாகிஸ்தான், பயங்கரவாதத்துக்கு தொடர்ந்து மறைமுக ஆதரவு அளித்து வருவதால், சர்வதேச அளவில் அது, நம்பகத் தன்மையை இழந்துவிட்டது.காஷ்மீர் விவகாரத்தில், ராணுவ நடவடிக்கை எடுக்க, பாகிஸ்தானால் முடியாது. அதனால், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காண்பது தான், பாகிஸ்தானுக்கு உள்ள ஒரே வாய்ப்பு. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4+ 20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
23-ஜன-202019:15:55 IST Report Abuse
M.COM.N.K.K. அடுத்து நீங்கள் சொல்லப்போவது இதுதான். பலுசிஸ்தான் பிரச்சனை பற்றி பாரத பிரதமர் மோடியுடன் உரையாடினேன். பலுசிஸ்தான் பிரச்சனையில் சமரசம் செய்ய அமெரிக்க்கா தயாராக இருக்கிறது இது எப்படி இருக்கிறது.இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதில் இது இருநாட்டு பிரச்சனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் மூன்றாம் நாடு தலையிட அனுமதிக்க முடியாது.சரிதானே பாகிஸ்தான் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
23-ஜன-202009:07:10 IST Report Abuse
blocked user சொல்லுவதைப்பார்த்தால் நான் பிடித்துக்கொள்கிறேன் நீ வந்து நன்றாக நாலு சாத்து சாத்து என்று சொல்வது போலத்தான் தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
23-ஜன-202008:52:16 IST Report Abuse
blocked user ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை விட்டு பாக்கிகளை துரத்தினால் இவர்கள் வாய் பேசமாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X