பொது செய்தி

இந்தியா

ஜனநாயக தரவரிசை இந்தியாவுக்கு சரிவு

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (17)
Advertisement
 ஜனநாயக,தரவரிசை,இந்தியாவுக்கு,சரிவு

புதுடில்லி, உலகின் சிறந்த ஜனநாயக நாடுகள் தரவரிசை பட்டியலில், 2018ல், 41வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்தாண்டுக்கான பட்டியலில், 51வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'தி எகனாமிஸ்ட்' இதழின் புலனாய்வு பிரிவு, கடந்தாண்டுக்கான சிறந்த ஜனநாயக நாடுகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.அதில், 2018ல், 41வது இடத்தில் இருந்த இந்தியா, 51வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.'சிவில் லிபர்டி' எனப்படும், குடிமக்களின் உரிமை மீறப்பட்டதால், 10 இடங்கள் சரிந்ததாக கூறப்படுகிறது.

கடந்தாண்டு, 7.23 புள்ளிகள் பெற்ற நிலையில், இந்தாண்டு, 6.90 புள்ளிகள் மட்டுமே கிடைத்து உள்ளது. அதன் மூலம், குறையுள்ள ஜனநாயகம் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மொத்தம், 165 நாடுகள் மற்றும் இரண்டு பிராந்தியங்கள் இடம்பெற்ற இந்தப் பட்டியலில், நம் அண்டை நாடான சீனா, 2.26 புள்ளிகளுடன், 153வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலில் நார்வே, ஐஸ்லாந்து, ஸ்வீடன் முதல் மூன்று இடங்களைப் பிடித்து உள்ளன.

வடகொரியா, கடைசி இடமான, 167வது இடத்தில் உள்ளது.நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், 108வது இடத்திலும்; இலங்கை, 69வது இடத்திலும்; வங்கதேசம், 80வது இடத்திலும் உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
23-ஜன-202019:19:44 IST Report Abuse
ரத்தினம் இது குடிகள் தங்கள் உரிமைகளை மீறுவதாலும், குடிகாரர்கள் ஆனதினாலும் , தேச விரோத கும்பல்களினாலும் தான் என்பது திண்ணம்.
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
23-ஜன-202016:19:03 IST Report Abuse
dandy ஹி ஹி ஹி சிறந்த ஜனநாயகம் ????? பிரியாணி ..குவார்ட்டர் ..ரூபாய்களுக்கு ..கை நாட்டுக்களிடமிருந்து.. ஒட்டு (செம்மொழி ) வாங்குவது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
23-ஜன-202013:17:38 IST Report Abuse
Darmavan இவர்களின் இரட்டை வேடம்....குடியுரிமை என்றால் என்ன அதை மீறுவது என்றால் என்ன .இவர்கள் மீறவில்லையா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X