பொது செய்தி

இந்தியா

'வியோம மித்ரா': விண்வெளிக்கு செல்ல உள்ள பெண் உருவ மனித ரோபோ

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
ISRO,Robot,இஸ்ரோ, விண்வெளி, பெண்_உருவ, மனித_ரோபோ, வியோமமித்ரா, சிவன்

பெங்களூரு: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும், 'ககன்யான்' திட்டத்தின் ஒரு பகுதியாக, மனித ரோபோவை அனுப்பி ஆய்வு செய்ய, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ' திட்டமிட்டுள்ளது.2021ல் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கு முன், 'வியோம மித்ரா'என்ற பெண் உருவம் கொண்ட, மனித ரோபோவை, இஸ்ரோ அனுப்ப உள்ளதாக, அதன் தலைவர் சிவன் தெரிவித்தார்.

விண்வெளிக்கு, 2021 டிசம்பரில், மனிதர்களை அனுப்ப, இஸ்ரோ திட்ட மிட்டுள்ளது. இதற்கு, 'ககன்யான்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான ஏற்பாடுகளில், இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், கர்நாடகா தலைநகர் பெங்களூரில், 'மனிதர்களின் விண்வெளிப் பயணம் மற்றும் ஆய்வுகள், தற்போதுள்ள சவால்கள், எதிர்காலத் தேவைகள்' என்ற தலைப்பில், நேற்று மாநாடு நடந்தது.இந்த மாநாட்டில், இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேசியதாவது:

ககன்யான் திட்டத்திற்காக, நான்கு விண்வெளி வீரர்கள் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது. அவர்கள், இம்மாத இறுதியில், ரஷ்யா செல்ல உள்ளனர்.


இந்திய விண்கலம்இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, 1984ல், ரஷ்ய விண்கலத்தில் பறந்தார். ஆனால் இம்முறை, இந்தியாவில் தயாரிக்கப்படும் விண்கலத்தில், இந்திய வீரர்கள் பறக்க உள்ளனர் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, மனித ரோபோவை அனுப்பி ஆய்வு செய்ய, இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கு முன், 'வியோம மித்ரா' என்ற பெண் உருவம் கொண்ட மனித ரோபோவை, இஸ்ரோ அனுப்ப உள்ளது.

இந்த மனித ரோபோ, இரண்டு மொழிகளில் பேசுவது உள்ளிட்ட பல பணிகளை, ஒரே நேரத்தில் செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த ஆண்டு இறுதியிலும், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திலும், இரண்டு ஆளில்லா விண்கலங்களை அனுப்ப, இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இரண்டாவது ஆளில்லா விண்கலத்தில், வியோம மித்ரா பயணிக்கும்.இது போல பல மனித ரோபோக்களை உருவாக்கி, விண்வெளி ஆய்வுக்கு இஸ்ரோ பயன்படுத்த உள்ளது.

நிலவுக்கும் மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் திட்டமும், இஸ்ரோவிடம் உள்ளது. உடனடியாக இல்லாவிட்டாலும், நிச்சயம், இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.


விண்வெளி நிலையம்விணவெளியில், புதிய விண்வெளி நிலையம் உருவாக்கி, அங்கு தொடர்ந்து மனிதர்கள் தங்கி, ஆய்வு மேற்கொள்ளவும், இஸ்ரோ திட்டமிட்டுஉள்ளது.இதற்காக, பெங்களூரு அருகே, விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையம் ஒன்றை உருவாக்கவும் இஸ்ரோ நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்காவின், நாசா உட்பட பல்வேறு விண்வெளி ஆய்வு நிறுவனங்களுடன், இஸ்ரோ பேசி வருகிறது.இவ்வாறு, சிவன் பேசினார்.


விண்வெளி தோழி

விண்வெளிக்கு ஆளில்லா விண்கலத்தில், இஸ்ரோ அனுப்ப உள்ள பெண் ரோபோவுக்கு, வியோம மித்ரா என, பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் வியோம என்றால், விண்வெளி; மித்ரா என்றால் நண்பன் அல்லது தோழி. விண்வெளி தோழி என்பதை குறிப்பிடும் நோக்கில் தான், பெண் ரோபோவுக்கு வியோம மித்ரா என, பெயர் வைக்கப்பட்டுள்ளது.


'வியோம மித்ரா பேசுகிறேன்'பெங்களூரு மாநாட்டில், பெண் ரோபோவான வியோம மித்ராவை, இஸ்ரோ தலைவர் சிவன் அறிமுகம் செய்து வைத்தார். இதைப் பார்த்து, மாநாட்டில் பங்கேற்றவர்கள் பெரும் ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.பின்னர், வியோம மித்ரா தன்னை தானே அறிமுகம் செய்து கொண்டது. வியோம மித்ரா பேசியதாவது:

அனைவருக்கும் வணக்கம், நான் தான் வியோம மித்ரா.ககன்யான் திட்டத்துக்காக, நான் தயாரிக்கப்பட்டுள்ள ரோபோ. விண்வெளியில் மாதிரிகளின் அளவுகளைக் கண்காணித்தல், ஆபத்து காலத்தில் எச்சரிக்கை செய்தல் ஆகியவை தான் என் பணி. விண்வெளிக்கும் வரும் விண்வெளி வீரர்களுடன், என்னால் பேச முடியும். அவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிப்பேன். இவ்வாறு, வியோம மித்ரா பேசியது.

இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், ''விண்வெளியில் உள்ள சூழல், மனிதர்களுக்கு ஏற்ற விதத்தில் இருக்கிறதா என்பதை ரோபோ ஆய்வு செய்யும்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
23-ஜன-202019:58:12 IST Report Abuse
M S RAGHUNATHAN Oh God they had chosen a Sanskrit name. Come on Seeman, Thirumavalavan, Vaiko, Stalin, Asuba Veerapandian, Veeramani etc. It is time to start another agitation against Aryan inspired Modi.
Rate this:
Share this comment
Cancel
Ravi Manickam - EDMONTON ,கனடா
23-ஜன-202009:07:20 IST Report Abuse
Ravi Manickam இதை கேட்கும் போது jennifer lawrence and chris pratt நடித்த passengers படத்தில் bartender ராக michael sheen நடித்த arthur கதாபாத்திரம் ஞாபகத்தில் வருகிறது, மனித தவறுகள் நடப்பதை தவிர்க்கும் நல்ல தொடக்கம். ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
23-ஜன-202008:23:12 IST Report Abuse
blocked user அருமை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X