கிரீசில் முதல் பெண் அதிபரானார் சகெல்ரோபவுலு

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020
Advertisement
Greece,president,Sakellaropoulou,Katerina_Sakellaropoulou,first_woman_president, கிரீஸ், அதிபர்

ஏதென்ஸ்: ஐரோப்பிய நாடான கிரீசின் முதல் பெண் அதிபராக ஏகதெரினி சகெல்ரோபவுலு 63, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிரிஸ் தலைநகர் ஏதென்சில் உள்ள பார்லிமென்டில் அதிபர் தேர்தல் இன்று(ஜன.,22) நடந்தது. இதில் 261 எம்.பி.க்கள் ஆதரவுடன் ஏகதெரினி சகெல்ரோ பவுலு வெற்றி பெற்றார். மூத்த நீதிபதியான இவர் சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் அரசியல் சட்டம் ஆகியவற்றில் நிபுணர். கிரீசின் முதல் பெண் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள சகெல்ரோபவுலு மார்ச் 13ல் அதிபராக பதவியேற்கிறார்.





பெண் அதிபர் தேர்வு குறித்து கிரீசின் பிரதமர் கிரியாக்கோஸ் மிட்சோடாகிஸ் கூறுகையில் "அதிபராக பெண் ஒருவரை தேர்ந்தெடுத்து நம் பாரம்பரியத்தை உடைத்துள்ளோம். அவர் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர் அல்ல" என்றார்.

கிரீசில் அரசு மற்றும் சட்டங்களை உறுதி செய்வதற்கான அதிகாரம் அதிபரிடம் உள்ளது. எனினும் அரசுடன் இணைந்துதான் அவர் எதையும் செயல்படுத்த முடியும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X