பொது செய்தி

இந்தியா

உலகின் மிகப்பெரிய நிறுவனம்; அதானி குழுமத்தின் இலக்கு

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (12)
Advertisement
Adani_Group,Gautam_Adani,Adani,solar_power, அதானி

புதுடில்லி: அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய சூரியஒளி மின்சார உற்பத்தி நிறுவனமாக உயர இலக்கு வைத்திருப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் தலைவர் கவுதம் அதானி மேலும் கூறியுள்ளதாவது: அடுத்த ஐந்து ஆண்டுகளில் சூரியஒளி மின்சார உற்பத்தியில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக அதானி குழுமம் உயர இலக்கு வைத்துள்ளது. மேலும் 2030ல் மிகப் பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமாகவும் மாற திட்டமிடப்பட்டுள்ளது.





கடந்த 2019ல் அதானி குழுமம் உலகின் 6வது பெரிய சூரியஒளி மின்சார நிறுவனமாக உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமாகும் நிலையில் உள்ளோம். மேலும் 2021ல் உலகின் மூன்று மிகப்பெரிய சூரிய ஒளி மின்சார நிறுவனங்களில் ஒன்றாகவும் மாறும்.

தற்போது 2.5 கிகாவாட் புதுப்பிக்கதக்க எரி சக்தியை உற்பத்தி செய்கிறோம். நடப்பு ஆண்டில் இது இருமடங்கு அதிகரிக்கும். 2025ல் 18 கிகாவாட் ஆக மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
23-ஜன-202015:04:54 IST Report Abuse
pradeesh parthasarathy மோடி இருக்க எனக்கு பயம் என்ன ..?
Rate this:
Share this comment
Cancel
(விடை விரும்பி) Vidai Virumbi - யாதும் ஊரே யாவரும் கேளிர்,இந்தியா
23-ஜன-202013:19:23 IST Report Abuse
(விடை விரும்பி) Vidai Virumbi Not at all possible
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
23-ஜன-202014:36:03 IST Report Abuse
 Muruga Velநல்ல வேலை சின்ன டி போட்டிருக்கீங்க ......
Rate this:
Share this comment
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
23-ஜன-202012:46:49 IST Report Abuse
Rengaraj இன்றைய காலகட்டத்தில் ஒரு தொழில் ஆரம்பித்து நாலு பேருக்கு வேலை தருவது என்பது எல்லாராலும் முடியாது. ஏமாற்றுகிறார், கொள்ளை லாபம் அடிக்கிறார் என்று சொல்லிக்கொண்டு பெரிய தொழிலதிபரிடம் வேலை பார்பவர்கள் தான் அதிகம். பிடிக்கவில்லை என்றால் விட்டு விலகி அவர் போன்று ஒரு தொழில் ஆரம்பித்து ஆரோக்கியமான போட்டி மூலம் அவருக்கு சவால் விடாமல் சவடால் பேசுபவர்கள் இருக்கும்வரையில் சுய முன்னேற்றம் மற்றும் சமுதாய முன்னேற்றம் காண்பது என்பது கஷ்டமான வேலைதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X