பொது செய்தி

தமிழ்நாடு

மலைவாழ் குழந்தைகளின் உள்ளம் கவர்ந்த ஆசிரியர்

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 மலைவாழ் குழந்தைகளின் உள்ளம் கவர்ந்த ஆசிரியர்

உடுமலை : அடிப்படை கல்விதேடி, மலையிறங்கும் குழந்தைகளுக்கு கற்பித்தல் பணியில் ஆசானாகவும், பராமரிப்பதில் பெற்றோராகவும், அவர்களின் அன்புள்ளம் கவர்ந்த ஆசிரியராக பணியாற்றுகிறார் லிங்கமாவூர் உண்டு உறைவிடப்பள்ளி ஆசிரியர் அய்யப்பன்.உடுமலை, கொங்குரார்குட்டை பகுதி, லிங்கமாவூரில் மலைவாழ் பகுதி குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது.





இப்பள்ளியில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, ஈசல்திட்டு, வால்பாறை, பொள்ளாச்சி சுற்றுப்பகுதியிலுள்ள மலைப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டப்பகுதிகளிலிருந்து, 23 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.இக்குழந்தைகளை பராமரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும், ஒரு சமையலர், பாதுகாவலர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். இங்குள்ள குழந்தைகள், அவர்களுக்கான தேவைகளை அவர்களாகவே செய்துகொள்ள வேண்டும். மேலும், முடி திருத்தம் செய்வதற்கு, தன்சுத்தம் உள்ளிட்டவைக்கு, அரசு, 50 ரூபாய் மட்டுமே குழந்தைகளின் பெற்றோர் வங்கிக்கணக்கில் வழங்குகிறது.

இதனால், பல குழந்தைகளும், முடி திருத்தம் செய்து கொள்ளாமல், மாதக்கணக்கில் பள்ளிகளில் இருப்பதும் நிகழ்கிறது.லிங்கமாவூர் பள்ளி, உடுமலையின் கடைக்கோடியில் இருப்பதால், இவ்வாறு பணியாளர்கள் அடிக்கடி வருவதற்கும் வாய்ப்பில்லாத நிலைதான் உள்ளது. இங்குள்ள குழந்தைகள் தன் சுத்தம் இழந்து பாதிக்கப்படும் நிலையில் தான், ஆசிரியர் அய்யப்பன் மாணவர்களின் வழிகாட்டியாகவும் மாறியுள்ளார்.கடந்தாண்டு, இப்பள்ளியின் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பிஞ்சு குழந்தைகள், தங்களின் கைகளால், ஆடைகளை துவைக்கத்தெரியாமல், அழுக்கு படிந்த சீருடையில் வகுப்புக்கு வரும் அவலம் இருந்தது. ஆசிரியர் இதனை கவனித்து, பாடம் படிப்பதற்கு முன்பு பழக்க வழக்கங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, குழந்தைகளின் தோற்றத்திலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

முதற்கட்டமாக, ஒரு மாணவருக்கு முடிதிருத்தம் செய்ய துவங்கியதில், அடுத்தடுத்த மாணவர்களும் ஆர்வத்தோடு ஆசிரியரிடம் முடிதிருத்தம் செய்துகொண்டனர். அப்பணியையும் அன்றாடப்பணியாகவே ஏற்றுக்கொண்டார். ஆசிரியர் அய்யப்பன் கூறியதாவது: நான் சிறுவதில், கோவை பள்ளபாளையம் ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் தான் படித்தேன். அங்கு படிப்புடன், பூஜை செய்வது, சமையல், தன்சுத்தம், துணிகளை சுத்தமாக பராமரிப்பது, கால்நடை பராமரிப்பு என அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் கற்றுகொடுக்கப்பட்டது.

ஆசிரியராக பாடபுத்தகங்களோடு நின்று விடாமல், குழந்தைகளுக்கு இந்த செயல்பாடு களையும் கற்றுதருவதால், அவர்களின் நடவடிக்கைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாள் தோறும் புத்துணர்ச்சியுடன் வகுப்புகளில் செயல்படுகின்றனர்.ஆர்வத்தோடு பாடம் கற்றுக் கொள்கின்றனர். ஒரு ஆசிரியராக இந்நிலைக்கு வர காரணமும் முருகேசன் என்ற ஆசிரியர் தான். மாணவர்களுக்கு தொடர்ந்து, நல்லவழிகாட்டுதலை வழங்குவதில் தான் பணியில் நுாறு சதவீதம் நிறைவு பெற முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pandi - Chicago,யூ.எஸ்.ஏ
23-ஜன-202011:52:03 IST Report Abuse
pandi வாழ்த்துக்கள் திரு. அய்யப்பன் ஐயா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X