அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜன.28ல் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (27)
Advertisement
 ஹைட்ரோ ,கார்பன் திட்டம், ஜன.28ல்,தி.மு.க., ,ஆர்ப்பாட்டம்

சென்னை, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும் ஜன.28ல்தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிக்கை: மத்திய அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 341க்கும் மேற்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான ஆய்வு கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் தேவையில்லை என ஜன.16ல்
அறிவித்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பையும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் திரும்ப பெற வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.28ல்தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலுார் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


'அறிவுசார் சொத்து வாரிய இடத்தை மாற்றக் கூடாது'

'டுவிட்டர்' பக்கத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தை அதன் அமைவிடமான சென்னையிலிருந்து மாற்ற மத்திய அரசு பரிசீலித்து வருவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அத்தகைய நடவடிக்கை நியாயமற்றது என்பதுடன் சென்னை மற்றும் தமிழக நலன்களுக்கு எதிரானது. இந்த நடவடிக்கையை பிரதமர் உடனே ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
23-ஜன-202020:01:20 IST Report Abuse
M S RAGHUNATHAN I am reminded of a scene in the film Mudalvan in which Raguvaran teases Arjun about detection of bombs placed by Raghuvaran's Hench men
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
23-ஜன-202019:40:01 IST Report Abuse
Allah Daniel பாத்து...கூட்டத்துல..நீ ஜப்பான் துணை முதலமைச்சரா இருந்தபோது...இதே திட்டத்துக்கு...(கட்டிங் வாங்கி) வீரமா கையெழுத்து போடும் போட்டோவை யாராவது காட்டிடபோறாங்க...
Rate this:
Share this comment
Cancel
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
23-ஜன-202019:20:29 IST Report Abuse
R.MURALIKRISHNAN இவர் இதுக்கு மட்டுந்தான் லாய்க்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X