அனைவருக்கும் இலவச, 'இன்டர்நெட்' சுந்தர் பிச்சையின் எதிர்பார்ப்பு

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
அனைவருக்கும், இலவச, இன்டர்நெட் , சுந்தர் பிச்சை, எதிர்பார்ப்பு,  உலகளாவிய_கட்டமைப்பு, ஒத்துழைப்பு

டாவோஸ்:உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, வெளிப்படையான, 'இன்டர்நெட்' இணைப்பு தேவை என, 'கூகுள்' நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

டாவோஸ் நகரில் நடைபெறும், உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது இவ்வாறு கூறியுள்ளார்.இது பற்றி, அவர் மேலும் கூறியுள்ளதாவது:உலகில் உள்ள
ஒவ்வொருவருக்கும், இலவச இணைய வசதி வேண்டும்.அனைவருக்கும், இலவச மற்றும் வெளிப்படையான இணையம் தேவை என்றாலும், ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் தரவு
இறையாண்மையும் முக்கியமானது. அது, பாதுகாக்கப்பட வேண்டும்.

இணையம் என்பது, உண்மையில் ஒரு ஏற்றுமதி தயாரிப்பாகும். இந்தியாவில், 'யு டியூப்'பில் ஒருவர் வீடியோவை உருவாக்கினால், அது உலகம் முழுவதிலிருந்தும் பார்வையாளர்களைப் பெறுகிறது. இது தான், 'டிஜிட்டல்' பொருளாதாரத்தின் அழகு.ஆரம்ப காலத்தில் நான் ஒரு தொலைபேசி அல்லது தொலைக்காட்சிக்காக காத்திருக்க வேண்டியதிருந்தது.

இந்த சாதனங்கள் என் வீட்டிற்கு வந்த ஒவ்வொரு முறையும், தொழில்நுட்பம் நம் வாழ்வில் எத்தகைய முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை கண்டேன். இப்போது, செயற்கை நுண்ணறிவு எப்படி மருத்துவம், வானிலை உள்ளிட்டவற்றில், சிறந்த ஒரு பாத்திரத்தை வகிக்க முடியும் என்பதை காண்கிறேன்.

செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை, ஒரு நிறுவனம் அல்லது ஒரு நாடு மூலம்
பாதுகாப்பை பெற முடியாது. அதற்கு, உலகளாவிய கட்டமைப்பு தேவை. இதற்கு, அனைத்து நாடுகளும் ஒத்துழைக்கும் என, நம்புகிறேன்.இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
23-ஜன-202019:49:03 IST Report Abuse
oce இணைய தளம் வந்த பிறகு தான் பாலியல் தொல்லைகள் அதிகரித்துள்ளன. இன்னும் அதை இலவசமாக்கினால் எவனுக்கும் திருமணமே ஆகாது. பிறக்கும் பிள்ளைகளின் அடையாளம் தெரியாமல் போகும்.
Rate this:
Share this comment
Cancel
Thiyaga Rajan - Chennai,இந்தியா
23-ஜன-202016:31:21 IST Report Abuse
Thiyaga Rajan அரசாங்கம் இலவசமா இன்டர்நெட் கொடுப்பாங்க .... இவங்க கூசாம அடுத்தவன் குறிப்புகளையும் தொடர்புகளையும் திருடி விப்பானுங்க .... youtube, மியூசிக் எல்லாத்துக்கும் மாதாந்திர சேவை கட்ட்டணம் வாங்குவானுங்க .... கூகிளின் ஊடுருவலை தடுக்க தனி அமைப்பை அரசாங்கம் உருவாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது கூட தெரியாம இருக்கானுங்க ......
Rate this:
Share this comment
Cancel
swega - Dindigul,இந்தியா
23-ஜன-202016:15:53 IST Report Abuse
swega அட பிச்சை. நீங்களும் பெரியார் கொள்கைகளால் தான் கூகிள்ல வேலை வாங்குனீங்களா?
Rate this:
Share this comment
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
23-ஜன-202017:57:11 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன்இவர் படித்த ஐஐடியில் இட ஒதுக்கீடு இல்லை. ஐஐடியில் SC/ST க்கு மட்டும் ஒதுக்கீடு உண்டு. மேலும் இன்டர்நெட்டை கொடுத்தாதான் அதை வைத்து அவர்கள் வியாபாரம் செய்ய முடியும். அவங்க குடுமி சும்மா ஆடலை...
Rate this:
Share this comment
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
26-ஜன-202013:44:21 IST Report Abuse
பஞ்ச்மணிஇட ஒதுக்கீடு இல்லை ஓபன் quota லே பாஸ் பண்ணி இன்னிக்கு உலகின் தலை சிறந்த கம்பெனியில் அந்த இருக்கு நீயும் நானும் என்ன தடமுன்னாலும் google தான். என்ன அவங்க டிசைன் அப்படி நம்ப டிசைன் இப்படி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X