பெங்களூரில் வெடித்து சிதறிய மர்மபொருள்: காங்., எம்.எல்.ஏ., படுகாயம்

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (20)
Advertisement
Bangalore,blast,MLA,Congress,எம்எல்ஏ,காங்கிரஸ்,பெங்களூரு

பெங்களூரு: பெங்களூருவில் மர்ம பொருள் வெடித்து சிதறியதில், காங்., எம்.எல்.ஏ., உட்பட பலர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து நகர் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரு சாந்திநகரில் உள்ள வண்ணார்பேட்டை பஜார் தெருவில், இரவு 9.30 மணியளவில், அத்தொகுதியில் காங்., எம்.எல்.ஏ., ஹாரிஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஹாரிசுக்கு, பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மர்ம பொருள் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் எம்.எல்.ஏ., உட்பட 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள செயின்ட் பிலோமினா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





சம்பவ இடத்தில், பெங்களூரு மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சேத்தன் சிங் ரத்தோர் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்களும் வெடித்த மர்மபொருளின் சிதறல்களை சேகரித்து ஆய்வு செய்தனர். போலீஸ் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு சிக்கிய சம்பவத்தை அடுத்து பெங்களூரில் தற்போது மர்ம பொருள் வெடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நகர் முழுவதையும் போலீசார் உஷார் படுத்தி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன் கோபால் புரம் வெடியூரப்பா ஆட்சியில் வெடி பொருள் வெடித்தது. பயங்கர வாதத்தை அடக்க துப்பில்லாத இந்த ஆட்சி உடனடியாக வலி வேண்டும். மக்கள் ஆதரவில்லாத இந்த ஆட்சி உடனடியாக ஒழிய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
23-ஜன-202010:33:21 IST Report Abuse
chails ahamad கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பார்கள், எந்த வகையிலாவது நாட்டில் மதவாத கலவரத்தை உண்டாக்க முடியாதா என ஏங்கி கொண்டுள்ள சங்கிகளின் கைவண்ணமாக இருந்திடவே வாய்ப்புகள் அதிகம், காவல்துறையினர் தக்கபடி விசாரணைகளை மேற்கொண்டு அன்றைய நிகழ்வுகளில் பங்கு பெற்ற சங்கிகளின் பின்புலத்தை ஆராய வேண்டும், ஆட்சி அதிகாரம் கைகளில் என்பதாலேயே நாட்டுமக்களை பந்தாட எண்ணுகின்ற மூடர்களை தக்கபடி தண்டனைகளை அனுபவிக்க செய்வதே, மீண்டும் இதுபோன்ற கொலை வெறி சம்பவங்கள் நடைபெறாது இருந்திட வழி வகுக்கும்
Rate this:
Share this comment
Nathan - Hyderabad,இந்தியா
23-ஜன-202012:03:35 IST Report Abuse
Nathanஇப்போ காங்கி இல்லை....
Rate this:
Share this comment
Cancel
Vijaya Raghav - chennai,இந்தியா
23-ஜன-202010:28:17 IST Report Abuse
Vijaya Raghav இவன் ஒரு ரவுடி ஆகையால் ஏதாவது ... இவனை காலி பண்ணுவதற்காக வெடி குண்டு வைத்திருப்பான் இவன் மகன் நல்பட் ஒரு மிகப்பெரிய ரவுடி இவனை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X