பொது செய்தி

இந்தியா

தூங்கா நகரமாகிறது மும்பை

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (5)
Advertisement
Mumbai,Maharashtra,Mumbai_24_hours,AadityaThackeray, மும்பை,மஹாராஷ்டிரா,ஆதித்யதாக்கரே

மும்பை: மும்பையில் உள்ள 'மால்'கள், தியேட்டர்கள், உணவகங்கள் ஆகியவை, வரும், 27ம் தேதி முதல், 24 மணிநேரமும் செயல்பட, மஹாராஷ்டிர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


ஒப்புதல்:


மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள, உணவகங்கள், மால்கள், தியேட்டர்கள் ஆகியவை, 24 மணிநேரமும் இயங்க வேண்டும் என்ற கோரிக்கையை, மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே, கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், '24 மணிநேரமும் இயங்கும் மும்பை' என்ற அந்த திட்டத்திற்கு, மாநில அமைச்சரவை, நேற்று(ஜன.,22) ஒப்புதல் அளித்தது.

அதுகுறித்து ஆதித்ய தாக்கரே கூறியதாவது: வரும், 27ம் தேதி முதல், மும்பையில் உள்ள மால்கள், உணவகங்கள், தியேட்டர்கள் ஆகியவை, 24 மணிநேரமும் இயங்குவதற்கு, மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவால், வருவாய் அதிகரிக்கும்; வேலை வாய்ப்புகள் உருவாகும்.





அரசு, ஒப்புதல் வழங்கி இருந்தாலும், 24 மணிநேரமும், கட்டாயமாக இயங்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் யாருக்கும் இல்லை. இரவு செயல்பட விரும்பும் நிறுவனங்கள் மட்டும் இயங்கலாம்.


கவலை இல்லை:


அதில், விடுதிகள் மற்றும் பார்களுக்கு, பழைய விதிகள் தொடரும். நள்ளிரவு, 1:30 மணிக்குள், அவை அடைக்கப்பட வேண்டும். முதற்கட்டமாக, குடியிருப்பு பகுதிகள் இல்லாத இடங்களில் இருக்கும் கடைகள், தியேட்டர்கள், உணவகங்கள் ஆகியவை இயங்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரவில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், ஆய்வு மேற்கொள்வர்.

திடக்கழிவு மேலாண்மை விதிகள் மீறப்பட்டாலும், சட்ட ஒழுங்கு மீறல் நடந்தாலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வாழ்நாள் தடை விதிக்கவும் வாய்ப்புள்ளது. நகர போலீசார், நள்ளிரவில், கடைகள் மற்றும் வளாகங்கள் அடைக்கப்பட்டுவிட்டதா என்பதை பார்க்கும் வேலையில், இதுவரை ஈடுபட்டிருந்தனர். இனி, அவர்களுக்கு அந்த கவலை இல்லை. சட்டம் - ஒழுங்கில் மட்டும், இனி அவர்கள் முழு கவனம் செலுத்துவர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜன-202011:49:26 IST Report Abuse
padma rajan மும்பை பல ஆண்டுகளாக தூங்காநகரம் ஆகவே உள்ளது. இரவு இரண்டு மணிக்கு சென்றாலும் பயம் கிடையாது பெரிய பெரிய கட்டிடங்களில் வசிப்பவர்கள் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டே உள்ளது அவர்கள் எப்போது தூங்குகிறார்கள் எப்போது பணிக்கு செல்கிறார்கள் என்பது விளங்காத புதிர். இரவு 2 மணி வரை ரயில்கள் இயங்குகின்றன. Fast locals பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை சமயங்களில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை செல்கின்றன அதுவும் காலியாக செல்வதில்லை. இப்படிப்பட்ட ஒரு ஆச்சரியமான நகரம் இந்தியாவில் எங்கும் இல்லை. சிக்னல் மேனேஜ்மென்ட் ரொம்பவும் அற்புதம் வரிசையாக ரயில்கள் வந்து கொண்டே இருந்தாலும் நிற்காமல் செல்வது ஆச்சரியம். சென்னையில் 10 நிமிடத்திற்கு ஒரு முறையும் 15 நிமிடங்களுக்கு ஒருமுறையும் இயக்கப்படும் ரயில்களுக்கு அவ்வப்போது சிக்னல் பிராப்ளம் உண்டாகின்றன. இங்குள்ள ரயில்வே ஊழியர் களை வைத்து அடித்து பயிற்சி கொடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
23-ஜன-202012:57:37 IST Report Abuse
padma rajanஇங்கே உள்ள ரயில்வே ஊழியர்களை மும்பைக்கு அனுப்பி பயிற்சி அளிக்க வேண்டும் என்ற வரிகள் வேறு மாதிரி தவறாக வந்துவிட்டன. மன்னிக்கவும்...
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
23-ஜன-202010:41:05 IST Report Abuse
 Sri,India இதனால் மது விற்பனை ஜோராக நடக்கும்,குடித்து விட்டு அப்பாவி மீது மோதி அவர்களையும் சாக வைப்பார்கள். போலீசுக்கு நல்ல வருமானம் தான் .
Rate this:
Share this comment
Shekar - Mumbai,இந்தியா
23-ஜன-202014:20:27 IST Report Abuse
Shekarஇங்கு மதுவிலக்கு எப்போதும் இல்லை, மதுக்கடையில் நம் ஊரைப்போல, யாரும் அடித்துக்கொண்டு வாங்குவதில்லை, ரோட்டில் புரள்வதும் இல்லை, நான் பத்து ஆண்டுகள் இரவு 2:30 க்கு பணிமுடித்து ட்ரைன்னில் வந்து இறங்குவேன், பலர் குடும்பமாகவும், பெண்களும் கூட அந்த சமயத்தில் நிறையபேர் வருவார்கள், பலர் நடந்து செல்வர் மற்றும் பலர் ஆட்டோவில் செல்வர், நாலுபேர் மட்டும் ஏற்றப்படும் ஷேர் ஆட்டோவில் பகலிலும் இரவிலும் அதே பத்து ரூபாய்தான். பெண்களும் தைரியமாக செல்லலாம். யாராவது முறை தவறினால் சிவசேனாவும் ராஜ்தாக்ரே கட்சியும் அவர்களை சும்மா விடமாட்டார்கள். மறு மார்கத்தில் ட்ரைன் மணி 3:25 க்கு ஆரம்பமாகிவிடும், எனவே அந்த ஒரு மணி நேரம் தான் இடைவெளி, எனவே இது ஏற்கனேவே தூங்காநகரம் தான். நீங்கள் சினிமாவையும் டாஸ்மாக்கையும் கண்டு குழம்பியுள்ளீர்கள்...
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
23-ஜன-202008:01:38 IST Report Abuse
மலரின் மகள் ///இந்த முடிவால், வருவாய் அதிகரிக்கும்///. எப்படி? மாற்றங்கள் மக்கள் நலன் சார்ந்து அமையவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X