வெளிநாட்டை சேர்ந்தவர் குடியுரிமை கேட்க முடியுமா?: மம்தா கேள்வி

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (56)
Advertisement

டார்ஜிலிங்: வெளிநாட்டை சேர்ந்தவர் என அறிவிக்கப்பட்ட ஒருவர், இங்கு குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க, குடியுரிமை திருத்த சட்டம் அனுமதிக்கிறதா என்பதை, அமித் ஷா தெளிவுபடுத்த வேண்டும்' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.






குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள டார்ஜிலிங்கில், நேற்று பேரணி நடத்தினார். இதில், 4 கி.மீ., துாரம் நடந்து சென்ற மம்தா, பின்னர் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசியதாவது:தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக, டில்லியில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில், மேற்கு வங்க அரசை தவிர, மற்ற அனைத்து மாநில அரசுகளும் பங்கேற்றன. பா.ஜ., அரசுக்கு பயந்து, அவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒவ்வொரு நாளும், புதுப்புது விளக்கங்களை அளித்து வருகிறார். குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில், எதிர்க்கட்சியினர் மக்களை தவறாக வழிநடத்துவதாக, நேற்று முன்தினம் குற்றம்சாட்டினார்.





வெளிநாட்டை சேர்ந்தவர் என, ஒருவர் அறிவிக்கப்பட்ட பின், அவர் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க, இச்சட்டம் அனுமதிக்கிறதா என்பதை, அவர் தெளிவுபடுத்த வேண்டும்.தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு, ஆவணங்கள் தேவையில்லை என, மத்திய அரசு கூறுகிறது. பின்னர் ஏன், பெற்றோரின் பிறந்த தேதி மற்றும் ஊர் விபரங்களை கேட்கிறீர்கள்.ஆவணங்கள் உள்ளவர்கள், ஆவணங்கள் இல்லாதவர்கள் என, இரு பட்டியலை தயாரிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-ஜன-202012:28:36 IST Report Abuse
Malick Raja கருத்துக்கள் கூறும் அறிவாளிகள் கவனத்திற்கு ... குடிமை பொருள் வழங்கல் அட்டை .. வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அடையாள அட்டை ஓட்டுநர் உரிமம் வங்கிக்கணக்கு பாஸ்ப்போர்ட் பள்ளி,கல்லூரிகளின் அடையாள அட்டை வேலை பார்க்கும் இடங்களின் அடையாள அட்டை ஒவ்வொரு அலுலவகத்திற்கும் தனித்தனி அடையாள அட்டை ...இவ்வளவையும் மீறி ஒருவன் நம் நாட்டில் குடியேற முடியுமா ? அப்படி குடியேறினால் எல்லை பாதுகாப்பு படை எதற்கு .. அரசாங்கம் எதற்கு ,, மக்கள் சிந்திப்பார்கள் என்று கூடவா அரசாங்கத்திற்கு தெரியாது .. ஆக பிறரை அழிக்க நினைப்பவர்கள் அழிந்த சரித்திரம் திரும்பவும் வருகிறதோ ? இந்துக்களின் அனைத்து கிரகந்தகளும் தான் வாழ மற்றவரை துன்புறுத்தாதே .. தானும் வாழ்ந்து பிறர்வாழ்வதையும் பார்ப்பவன் மனிதன் .. சமீபகால விவேகானந்தர் தான்வாழ பிறரை கெடுப்பவன் மனிதனே அல்லர் என்று சொல்லிவிட்டார் .. அரசியல் சாசனம் சொல்வது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும் இன்பத்தால் அரசியல் சாசனப்படி இந்தியாவில் பிறந்தவர்கள் இந்தியர்கள் ..இந்தியர்களை வேளியேற வேண்டும் என்றும் சொல்பவர்கள் அழிக்கப்படவேண்டியவர்களே என்பது உண்மையாகவே இருக்கும் ..அது தொடரும்
Rate this:
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
23-ஜன-202018:07:35 IST Report Abuse
adithyan அதற்க்கு தனியே சட்டம் உண்டு. சட்டத்தை படிக்கவும்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
23-ஜன-202015:35:12 IST Report Abuse
Endrum Indian வெளிநாட்டினன், முஸ்லீம் என்றால் அவனுக்கு குடியுரிமை கிடைக்காது என்று சட்டம் மாற்றப்படவேண்டும் என்று முஸ்லீம் பேகம் மும்தாஜ் விரும்புவதாக நாம் இந்த மாதிரி கேள்வியை கொள்வோமாக????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X