ஊடகங்களுக்கு ஹாரி எச்சரிக்கை

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (5)
Advertisement

விக்டோரியா: ''எங்களை பின்தொடரும் ஊடகங்கள் மீது, சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்,” என, அரச குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகிய ஹாரி, எச்சரிக்கை விடுத்துள்ளார்.






பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன், சார்லஸ் - மறைந்த- டயானா தம்பதிக்கு, வில்லியம்ஸ், ஹாரி என, இரண்டு மகன்கள் உள்ளனர்.இளைய மகன் ஹாரி, அமெரிக்க முன்னாள் நடிகையான மேகன் மார்க்கல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிக்கு, ஆர்ச்சி என்ற எட்டு மாத ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில், அரச குடும்ப வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாக, ஹாரி - மேகன் தம்பதி, சமீபத்தில் அறிவித்தனர்.சாதாரண மக்களைப் போல, சுயமாக வாழ விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு, அரச குடும்பத்தில் இருந்து வெளியேற, ராணி இரண்டாம் எலிசபெத், அனுமதி வழங்கினார்.ஹாரி - மேகன் தம்பதி, வட அமெரிக்காவின் கனடாவில், தங்கள் புதிய வாழ்க்கையை துவங்கியுள்ளனர்.





வான்கூவர் தீவின் விக்டோரியாவில் வாழத் துவங்கியுள்ள அவர்களைப் பற்றிய புதிய புகைப்படங்கள், பிரிட்டன் பத்திரிகைகளில் நேற்று வெளியாகின.மேகன், தன் குழந்தை ஆர்ச்சியை சுமந்தபடி, வளர்ப்பு நாய்களுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகின. ஹாரி தம்பதி தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகிலுள்ள புதரில் இருந்து, அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய ஹாரி தரப்பு வழக்கறிஞர், அந்த பகுதியைச் சுற்றி, புகைப்படக்காரர்கள் முகாமிட்டுஉள்ளதாக புகார் கூறினார்.அரச குடும்பத்தில் இருந்து விலக, ஊடகங்கள் முக்கிய காரணமாக பார்க்கப்பட்ட நிலையில், அவர்களின் இந்த செயல், ஹாரியை மேலும் கோபம் அடையச் செய்துள்ளது.இதனால் ஆத்திரம்அடைந்த ஹாரி, தங்களை பின்தொடரும் ஊடகங்கள் மீது, சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நிஷார்பானு, என்ஃபீல்டு பாவம் ..விட்ருங்க...அமைதியாக வாழ்ந்துவிட்டுப்போகட்டும்டா..அந்த பரிதாபத்திற்குரியஸஜீவன்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
23-ஜன-202008:09:03 IST Report Abuse
blocked user இராஜ குடும்பம் ஒருவரை அவ்வளவு எளிதில் சாதாரண மனிதராக வாழ விட்டு விடாது. டயானாவை விட்டு வைத்து விடவில்லையே..
Rate this:
Share this comment
KavikumarRam - Indian,இந்தியா
23-ஜன-202008:48:56 IST Report Abuse
KavikumarRamராஜ குடும்பம்? பாரம்பரிய கொள்ளை கும்பல்....
Rate this:
Share this comment
குறையொன்றுமில்லை - குன்றக்குடி,இந்தியா
23-ஜன-202012:31:53 IST Report Abuse
குறையொன்றுமில்லைசரியாய் சொன்னிங்க ஆனா ம்ம்ம் தாண்டவக்கோனே மற்றும் தஞ்சை மன்னர் எல்லாம் அக்மார்க் மன்னர்கள்...
Rate this:
Share this comment
Srinivas - Chennai,இந்தியா
23-ஜன-202019:05:48 IST Report Abuse
Srinivasஉலக நாடுகள் அனைத்தையும் கொள்ளையடித்து கொண்டுபோய் தன் நாட்டை வளப்படுத்திய குதர்க்கபுத்திகொண்ட திருடர்கள். இந்தியாவில் எத்தனை எத்தனை லட்சம் அப்பாவி மக்கள் இந்த கொடுங்கோலர்களின் காலத்தில் இறந்துபோனார்கள். நினைத்தாலே நெஞ்சம் பதறும். ஜாலியன் வாலாபாக்கில் அமைதி போராட்டம் நடத்திய மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றுகுவித்த அரக்கர்கள் நிறைந்த கூடாரம். நம் நாட்டிலிருந்த அனைத்து வளங்களையும் கொள்ளையடித்து கொண்டுபோய் தன் நாட்டை உயர்த்திய கொள்ளைக்கூடாரத்தை ராஜ குடும்பம் என்பது மிகக்கேவலம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X