கண்டன தீர்மான விசாரணை: டிரம்புக்கு முதல் வெற்றி

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (4)
Advertisement

வாஷிங்டன்: கண்டன தீர்மானம் தொடர்பாக, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கொண்டு வந்த தீர்மானங்கள், அமெரிக்க செனட் சபையில் தோல்வியடைந்தன. இதன் மூலம், அதிபர் டிரம்புக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.


அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதில் வெற்றி பெறுவதற்காக மோசடி செய்ததாக, அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக, எதிர்க்கட்சியான, ஜனநாயக கட்சி கண்டன தீர்மானம் கொண்டு வந்தது.ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை உள்ள, கீழ்சபையான பிரதிநிதிகள் சபையில், இந்த தீர்மானம் வெற்றி பெற்றது. அதையடுத்து, தற்போது, செனட் சபைக்கு இந்த தீர்மானம் வந்துள்ளது.செனட் சபையில், டிரம்பின் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது.

அதனால், இந்த தீர்மானம் வெற்றி பெறுவதற்கு சாத்தியமில்லை என, கூறப்படுகிறது.இந்நிலையில், இந்த தீர்மானம் குறித்த விசாரணைக்கான வழிமுறைகளை வகுப்பது தொடர்பாக, செனட் சபையில் விவாதம் நடந்தது. பல்வேறு புதிய சாட்சிகளை விசாரிக்க வேண்டும்; புதிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என, ஜனநாயக கட்சி வலியுறுத்தியது.ஆனால், இதற்கு, குடியரசு கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. அதையடுத்து, ஜனநாயக கட்சியின் கோரிக்கைகளை ஏற்பது குறித்த தீர்மானத்தின் மீது, ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அது, 53 : 47 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இது, டிரம்புக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

தற்போது, குடியரசு கட்சி தாக்கல் செய்துள்ள வழிமுறைகளின் அடிப்படையிலேயே, செனட் சபையில் விவாதம் நடக்கும். அதாவது, மொத்தம் ஆறு நாட்களில், 48 மணி நேரம் சபையில் விவாதம் நடத்தப்படும். இரு பிரிவுகளுக்கும், தலா, 24 மணி நேரம் வாய்ப்பு வழங்கப்படும். புதிய ஆவணங்கள், புதிய சாட்சிகள் ஏற்கப்படாது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
23-ஜன-202019:48:06 IST Report Abuse
Krishna Winning By Mere 6% (that too Not By Direct Elect Peoples Reps But Nominated Upper House which Must be Abolished) Cannot be a Win at all. All Upper Houses Must Be Abolished (VVVHuge Wastage of Peoples Money). However For Moderating Dictatorial Misuses of Loksabha-Parliament-House of Reps-Congress etc (Happening Everywhere Incl. US, India etc-due to Sheepish Reps of Shepherd Party Leaders), non-costly Every-Year Elections Must be Compulsory (so that People's Reps Will Fear Supreme People)
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
23-ஜன-202018:10:59 IST Report Abuse
தமிழர்நீதி இவரு இங்குள்ள மோடி மாதிரி , நீதியரசருக்கு கவர்னர் பதவி , தேர்தலில் ஓட்டுப்போடும் இயந்திரம் தில்லுமுல்லு , மக்களை திசைதிருப்ப CAA அப்படி ..ஏமாற்ற தெரிந்தவர் . தற்போது உலகில் சீனா ,ரஷ்ய , துருக்கி ,வடகொரியா , அமெரிக்கா , இந்தியா , இஸ்ரேல், ஈரான் , பாலஸ்த்தீனம் , பாகிஸ்தான் நாடுகளில் மோடி மாதிரி தலைவர்களைத்தான் .மக்கள் விரோதிகள் , ஜனநாயகத்தை படுகொலை செய்பவர்கள் , மேடையில் வாயில் வடைசுடுபவர்கள் ,தன் சொந்த நாட்டு மக்களை சீரழித்து மதவாதம் ,இனவாதம் பேசி மயக்குபவர்கள், ஆளத்தெரியாதவர்கள் வாழ்த்தெரிந்தவர்கள். இனவாத ,மதவாத வெறியேற்றி வெறுப்பில் அறுவடை செய்பவர்கள் .
Rate this:
Share this comment
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
23-ஜன-202012:23:30 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி நமது பாரதத்தைப்போலவே அமெரிக்காவிலும் நாட்டைவிட்டு பதவிக்கு வருவதையே பெரிதாக்க கருதும் அரசியல் இருக்கிறது. அதனால்தான் தோல்வியா ஒப்புக்கொள்ளாமல் ஆரம்பத்திலிருந்தே ட்ரம்ப்புக்கு எதிர்க்க கட்சிகள் குடைச்சல் கொடுத்துக்கொண்டே வந்தன. ட்ரம்ப் அமெரிக்க நாட்டின் உண்மையான தேச பக்தர் என்ன அடுத்த நாட்டவரைவிட தன நாட்டவருக்கு எல்லாவற்றிலும் முன்னுரிமை கொடுக்க நினைக்கிறார்.அது தவறல்ல. அதனால் நம்மைப் போன்றவர்களுக்குப் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். நம்மவர்கள் வெளி நாட்டை நம்பியிராமல் இங்கேயே பணி புரிந்து திருப்திப்பட முயல வேண்டும். மீண்டும் ட்ரம்ப்பே அமெரிக்காவுக்கு அதிபராவதுதான் அந்த நாட்டுக்கு நல்லது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X