யானைகள் வழித்தட வழக்கு: குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் முடிவு

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (9)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: 'நீலகிரி மாவட்டத்தில், யானைகள் வழித்தடத்தில், சட்டத்திற்கு உட்பட்டுதான் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆராய, குழு அமைக்கப்படும்' என, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில், யானைகள் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு, உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன. இவற்றை அகற்றக் கோரி, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்டோர் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது, நாடு முழுவதும் யானைகள் வழித்தடத்தில் கட்டுமான பணிக்கு தடை கோரி ரங்கராஜன் என்பவர் தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டு வருகிறது.இவ்வழக்கு, நேற்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகள், எஸ்.அப்துல் நசீர், சஞ்ஜீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உ.பி.,யின் ராஜாஜி தேசிய பூங்கா உட்பட, நாட்டின் இதர யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் சார்பில், காங்., மூத்த தலைவரும், வழக்கறிஞருமான சல்மான் ருஷ்டி ஆஜராகி வாதாடிய போது, ''யானைகள் வழித்தடத்தில் மருத்துவமனைகள்,கட்டடங்கள், தேவாலயங்கள் ஆகியவை உள்ளன. அப்பகுதி, வனமாக அறிவிக்கப்படாத பகுதியாகும். எனவே, அது வனப் பகுதியா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்," என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.எஸ்.நட்கர்னி வாதாடிய போது, ''குடியிருப்புகள் கட்டுவதற்கான அனுமதியை பெற்று, ஓட்டல்களும், தங்கும் விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன,'' என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தில், யானைகளை தொந்தரவு செய்ய யாரையும் அனுமதிக்க மாட்டோம். அதேசமயம், யானை வழித் தடங்களில் யாரையும் அகற்றவும் நீதிமன்றம் விரும்பவில்லை. எனவே, சட்டபூர்வ அனுமதியுடன் அக்கட்டடங்கள் கட்டப்பட்டனவா என்பதை அறியவும், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை நிர்ணயிக்கவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், மூவர் குழு அமைக்க விரும்புகிறோம். இது குறித்து, இரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். இவ்வாறு உத்தரவு பிறப்பித்து, வழக்கை ஒத்தி வைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mthahir - Kuwait,குவைத்
23-ஜன-202014:28:59 IST Report Abuse
mthahir ஏன் ஈஷா யோகா மையத்தை பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. அதுவும் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ளது.
Rate this:
Share this comment
Cancel
23-ஜன-202012:18:03 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren read between the lines, "Devalayngal" means churches,.so action will not be taken, media silence is the example,
Rate this:
Share this comment
Cancel
sudharman - chennai,இந்தியா
23-ஜன-202010:48:21 IST Report Abuse
sudharman யானைகளை தொந்தரவு செய்ய யாரையும் அனுமதிக்க மாட்டோம். அதேசமயம், யானை வழித் தடங்களில் யாரையும் அகற்றவும் நீதிமன்றம் விரும்பவில்லை. எனவே, சட்டபூர்வ அனுமதியுடன் அக்கட்டடங்கள் கட்டப்பட்டனவா என்பதை அறியவும், –என்ன தான் சொல்ல வரீங்க யுவர் ஹனோர் . நல்லா சொல்றிங்க இன்னும் நல்லா வருவீங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X