மிரட்டும் கொரோனாவைரஸ் : வுஹன் நகருக்கு செல்ல சீனா தடை விதிப்பு

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (4)
Advertisement

இந்த செய்தியை கேட்க

பீஜிங் : கொடிய ஆட்கொல்லி வைரசான கொரோனாவைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருவதை அடுத்து, வுஹன் நகருக்கு செல்ல சீன அரசு தடை விதித்துள்ளது.






மனிதர்களின் நுரையீரலை தாக்கி, மூச்சுத்திணறல் போன்ற நோய்களை உருவாக்கி, மரணத்தை ஏற்படுத்தக் கூடியது கொரோனா வைரஸ். இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டது. சீனாவின் வுஹன் நகரில் உருவாகி உள்ள இந்த வைரஸ், தற்போது சீனா மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. கொரோனாவைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் இதுவரை சுமார் 17 பேர் பலியாகி உள்ளனர். 550 க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனாவைரஸ் பாதிப்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





இதனால் வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க வுஹன் நகரில் உள்ள யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், சீனாவின் மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் வுஹன் நகருக்கு வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வுஹன் நகருக்கு மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வுஹன் நகரிலும் பஸ்கள் போன்ற பொது போக்குவரத்து, சுரங்கப்பாதை போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் மற்றும் விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் இருப்பவர்கள் பொது இடங்களை பயன்படுத்தும் போது முகமூடி அணிந்து செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - Chennai,இந்தியா
23-ஜன-202017:02:36 IST Report Abuse
R S BALA இப்படித்தான் பன்றி காய்ச்சல் எங்கேயோ தொடங்கி இந்தியாவுக்குள் நுழைந்து பல உயிர்களை பலி வாங்கியது ... நாமும் அலட்சியம் காட்டாமல் முன்னெச்சிரிக்கை நடவடிக்கை மிக தேவை .
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
23-ஜன-202009:09:08 IST Report Abuse
blocked user சார்சை விட உக்கிரமான வைரஸ் போலத்தான் தெரிகிறது. சீனப்பொருளாதாரம் ஏற்கனவே படுத்துவிட்டது.. இது இன்னும் மோசமாக்கும்...
Rate this:
Share this comment
Cancel
samkey - tanjore,இந்தியா
23-ஜன-202009:08:17 IST Report Abuse
samkey 7 -ம் அறிவு படம் உண்மை கதை என நிரூபணம் ஆகிறது. சீனா இதிலிருந்து மீண்டு வர போதி தர்மரின் வழியை பின்பற்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X