பொது செய்தி

இந்தியா

3ம் நாடு தலையிட அனுமதிக்க முடியாது : டிரம்ப்பிற்கு இந்தியா பதில்

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (11)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிட அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு மீண்டும் இந்தியா திட்டவட்டமாக பதிலளித்துள்ளது.





சுவிட்சர்லாந்தின் டாவோசில் நடக்கும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்த கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, பாக்., பிரதமர் இம்ரான் கான் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் காஷ்மீர் பிரச்னை குறித்து பேசியதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். மேலும் காஷ்மீர் பிரச்சினையில் உதவ அமெரிக்கா தயாராக உள்ளதாகவும், இரு நாட்டு தலைவர்களும் விரும்பினால் தான் மத்தியஸ்தராக இருந்து பிரச்னையை தீர்க்க தயாராக உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார். ஏற்கனவே டிரம்ப்பின் சமரச முயற்சியை இந்தியா பல முறை நிராகரித்த போதும் மீண்டும் டிரம்ப் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.




இதனை இந்தியா மீண்டும் நிராகரித்துள்ளது. டிரம்ப்பின் சமரச முயற்சி முயற்சி தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிலில், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிடக்கூடாது என்ற இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. காஷ்மீர், இரு நாடுகள் இடையேயான பிரச்னை. இதனை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும். பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்று ஆகிவிட முடியாது. பயங்கரவாத ஆதரவை முதலில் பாக்., கை விடட்டும், அதன் பிறகு எந்த பேச்சுவார்த்தைக்கும் இந்தியா தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
23-ஜன-202013:07:37 IST Report Abuse
Anand POK ஐ எந்த நிபந்தனையும் இல்லாமல் இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும் அல்லது ராணுவ நடவடிக்கை மூலம் மீட்கப்படும். சமாதானமா அல்லது உதையா பாகிஸ்தான் முடிவு செய்துக்கொள்ளட்டும்.
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
23-ஜன-202012:17:18 IST Report Abuse
narayanan iyer எங்களின் நாட்டின் பகுதியில் குடியேறி தனது நாடு என்று சொல்லும் கயவர்களிடம் என்ன மத்தியஸ்தம் ?? நாங்கள் சொல்லியாகிவிட்டது . இனியும் பொறுக்க முடியாது . வாலை சுற்றிக்கொண்டு வெளியேறு என்று . இனியும் உலக நாடுகளிடம் போய் சொல்லவேண்டாம் பாகிஸ்தான் அரசே எங்கள் நாட்டை விட்டு விலகுங்கள் நாங்கள் எங்களின் நாட்டை வளப்படுத்தவேண்டும். ஒரே பாரததேசம் என்று .மற்ற மாநிலங்களில் சம அந்தஸ்துடன் அவர்களுடன் வாழ்கிறோம் அப்படியே காஷ்மீரிலும் சம அந்தஸ்தில் வாழ்வோம்.
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
23-ஜன-202011:24:27 IST Report Abuse
M.COM.N.K.K. டிரம்ப் சும்மாதான் சொன்னார் ஈரானுடன் பாகிஸ்தான் போய்விடக்கூடாது அதற்காகத்தான் இப்படி ஒரு குண்டை போட்டார். இப்படி செய்தால்தான் அமெரிக்காவிற்கு நல்லது பாகிஸ்தானை அவ்வப்பொழுது இப்படி குழி படுத்துவார் இது நமக்கு தெரியாதா என்ன.
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
23-ஜன-202013:22:39 IST Report Abuse
s.rajagopalanஇம்ரான் ஒரு அழு மூஞ்சி ....டிரம்ப் அதுக்கு ஒரு 'லாலி பாப்' கொடுத்திருக்கிறார். ..அவ்வளவுதான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X