பொது செய்தி

இந்தியா

நிர்பயா குற்றவாளிகளுடன் இந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கணா ஆவேசம்

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (36)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : நிர்பயா குற்றவாளிகளுடன் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கையும் 4 நாட்கள் சிறையில் அடையுங்கள் என நடிகை கங்கணா ரனாவத் பேசி உள்ளார்.


இந்திரா ஜெய்சிங்குக்கு அவர் ஸ்டைல்லயே பதிலடி கொடுத்துருக்கார், நடிகை கங்கணா ரணாவத். ''என்ன மாதிரியான பொம்பள அந்தம்மா? ரேப்பிஸ்ட்கள் கிட்ட இரக்கம் காட்டுறாங்க.. அந்த ரேப்பிஸ்ட்ங்க இருக்ற அதே ஜெயில்ல இந்த பொம்பளய 4 நாள் போடணும்; அப்பதான் புரியும்.. இப்படிப்பட்ட பொம்பளைங்கதான் அந்த மாதிரி அரக்கன்களை பெத்தெடுக்கிறாங்க''னு இந்திரா ஜெய்சிங்க விளாசித் தள்ளிருக்கார், கங்கணா.

டில்லியில் 2012 ம் ஆண்டு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மாறி மாறி தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் ஆகியன நிராகரிக்கப்பட்டு விட்டதால் பிப்.,1 ம் தேதி காலை 6 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் பணியை திகார் சிறை நிர்வாகம் கவனித்து வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் மீடியாக்களுக்கு பேட்டி அளித்த மனிதஉரிமைகள் அமைப்பின் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை குற்றவாளிகளை சோனியா மன்னித்ததை போன்று, அவரை முன்னுதாரணமாககக் கொண்டு நிர்பயாவின் தாயும் குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.

வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கின் இந்த கருத்திற்கு நிர்பயாவின் தாய் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத்திடம் இந்திரா ஜெய்சிங் கோரிக்கை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த கங்கணா, நிர்பயா குற்றவாளிகள் இருக்கும் சிறையில் அவர்களுடன் சேர்த்து இந்திரா ஜெய்சிங்கையும் 4 நாட்கள் சிறையில் அடையுங்கள். இவரை போன்ற பெண்களால் தான் அரக்கர்களும் கொலைகாரர்களும் உருவாக்கப்படுகிறார்கள் என ஆவேசமாக பதிலளித்தார். கங்கணா, பல்வேறு சமூக பிரச்னைகளிலும் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23-ஜன-202022:01:02 IST Report Abuse
Natarajan Ramanathan கருப்பு துணி போட்டு மூடுவது அண்ணன் தம்பி மனைவியையோ (அல்லது) தம்பி அண்ணனின் மனைவியையோ தள்ளிக் கொண்டு போனாலும் தெரியாம இருக்க.
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
23-ஜன-202020:19:06 IST Report Abuse
Krishna When Law & Courts Have Already Taken Care of Justice (may be Delayed & with Media Trial), These Anti-Men Prowomen Fanaticism Must be Crushed with Iron Hand. Otherwise, it will not be far that Men (non Pleasure Seekers by Pleasure Givers) will start Retaliating (already Congress Lost only because of that & Not Because of Corruption as People Know That Every Party is Corrupt)
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23-ஜன-202019:41:54 IST Report Abuse
Natarajan Ramanathan கருப்பு துணி போட்டு மூடுவது அண்ணன் தம்பி மனைவியையோ (அல்லது) தம்பி அண்ணனின் மனைவியையோ தள்ளிக் கொண்டு போனாலும் தெரியாமல் இருக்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X