சேவாக் தலைமுடியை விட என்னிடம் அதிக பணம்; அக்தர் கிண்டல்

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (14)
Advertisement
ShoaibAkhtar, VirenderSehwag, MoreMoney, HeadHair, Pakistan, India, பாகிஸ்தான், சோயப்அக்தர், அக்தர், சேவாக், வீரேந்தர்சேவாக், இந்தியா, அதிகபணம்

இந்த செய்தியை கேட்க

ராவல்பிண்டி: முன்னாள் இந்திய தொடக்க வீரர் சேவாக்கின் தலையில் இருக்கும் முடிகளின் எணணிக்கையை விட தன்னிடம் அதிக பணம் இருப்பதாக, பாக்., முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் நக்கலாக பேசியுள்ளார்.

இந்தியா - பாக்., உடனை் இந்திய கிரிக்கெட் போட்டி என்றாலே உலகம் முழுவதும் ஒருவித எதிர்பார்ப்பும், பரபரப்பும் தொற்றிக்கொள்ளும். போட்டியில் மட்டுமல்லாமல், இருநாட்டு கிரிக்கெட் வீரர்களின் பேச்சும் காரசாரமாக தான் இருக்கும். இதனால், இந்தியா-பாக்., போட்டிகளுக்கான வர்த்தகமும் உலக கோப்பைக்கு இணையாக இருக்கும். அண்டை நாடாக இருந்தாலும், பாக்., வீரர்கள் சிலர் அவ்வப்போது இந்திய அணியை பற்றியும் பெருமையாகவும், ஆதரவாகவும் புகழ்ந்து வந்தனர்.




பாதுகாப்பு இல்லாமை மற்றும் பயங்கரவாதத்தை கைவிடாததால், இந்திய அணி, பாக் உடனான நேரடி போட்டிகளை தொடர்ந்து தவிர்த்து வருகிறது. இதனால், பாக்., வீரர்கள் அதிருப்தியில் இருந்தனர். இருந்தாலும், இந்தியாவுடனான போட்டியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பதாக சில முன்னாள் வீரர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோவில், சோயப் அக்தரருக்கு பணம் தேவைப்படுவதால் இந்தியாவை புகழ்ந்து பேசுகிறார், என கூறியிருந்தார்.




இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், தற்போது இது குறித்து அக்தர் கிண்டலாக பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: எனது நண்பர் சேவாக் பேசிய வீடியோ வைரலாகிவிட்டது. ஒரு சாதாரண பையனான நான், சீரியஸாக இல்லாமல் தான் பேசினேன் என்பது சேவாக்கிற்கு தெரியும். ஆனால், அக்தருக்கு பணம் தேவை என்பதால் இந்தியாவை புகழ்கிறார் என அவர் பேசியுள்ளார்.

ஒருவரின் செல்வம் அல்லாவால் தான் கிடைக்கிறது; இந்தியாவால் அல்ல. சேவாக்கின் தலைமுடியின் எண்ணிக்கையை விட, (சேவாக் தலையில் முடி குறைவு) என்னிடம் அதிக பணம் இருக்கிறது. நான் இதை வேடிக்கையாக தான் சொல்கிறேன், நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு அக்தர் கூறினார். அக்தரின் இந்த பேச்சால் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
24-ஜன-202001:41:10 IST Report Abuse
sankar சேவக் பேசியது தவறு தான் . நமக்கு அக்தரையும் தெரியும் விளையாடும் காலத்தில் இந்துவை மிகவும் எரிச்சல் படுத்தியவர் பின்னர் மாறிவிட்டார் என நினைக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
23-ஜன-202022:29:21 IST Report Abuse
 nicolethomson அல்லா உட்கார்ந்து சேவாக் முடியை அளந்து இருப்பாரோ? எதுக்கு உன்னோட கடவுள் பாசம் இங்கே?
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
23-ஜன-202020:17:58 IST Report Abuse
M.COM.N.K.K. விளையாட்டு வீரர்கள் சொல்வதை நாம் விளையாட்டாகவே எடுத்துக்கொள்ளலாம் தவறில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X