கமல்நாத் கழுத்தை பிடித்து தள்ளுவோம்: சீக்கிய அமைப்புகள்

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : ம.பி., முதல்வர் கமல்நாத், டில்லியில் பிரசாரத்திற்கு வந்தால் கழுத்தை பிடித்து தள்ளி வெளியேற்றுவோம் என அகாலி தள தலைவரான மஜ்ஜிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.



latest tamil news


டில்லி சட்டசபை தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை காங்., நேற்று (ஜன.,22) வெளியிட்டது. இதில் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்த பட்டியல் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் கருத்து வெளியிட்ட டில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக கமிட்டி தலைவரும், அகாலிதள தலைவருமான மஜ்ஜிந்தர் சிங் சிர்சா, டில்லியில் பொதுக் கூட்டங்களில் கமல்நாத் பிரசாரம் செய்தால் அவரை கழுத்தை பிடித்து தள்ளி, வெளியேற்றுவோம் என தெரிவித்துள்ளார்.


latest tamil news



மேலும் அவர் கூறுகையில், கமல்நாத்தை பிரசாரம் செய்ய எந்த காரணத்திற்காகவும் அனுமதிக்க மாட்டோம். அனைத்து விதத்திலும் காங்.,ஐ எதிர்க்க தயாராக வேண்டும். டில்லியின் எந்த மூலையிலும் கமல்நாத்தை பிரசாரம் செய்ய விடமாட்டோம். மீறி காங்., அவரை மேடைக்கு அனுப்பினால் அவரை கழுத்தை பிடித்து தள்ளி, வெளியேற்றுவோம்.

சீக்கியர்களை கொன்றவர்களை காங்., ஊக்குவித்து வருகிறது. 1984 சீக்கிய கலவரத்தில் கமல்நாத்தும் கொலைகாரர். அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவதுடன், அவர் மீதான வழக்கையும் மீண்டும் திறக்க உள்ளோம். தொடர்ந்து அவருக்கு தேர்தலில் சீட் அளித்தும், அமைச்சர் பதவி கொடுத்தும் காங்., அவரை ஊக்கப்படுத்தி வருகிறது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஜன-202015:09:53 IST Report Abuse
அருணா மனிதத் தன்மை இல்லாமல் வேட்டை யாடிய கும்பல் நாட்டில் இருப்பதோ பதவிக்கு வருவதோ மக்கள் தான் யோசித்து முடிவு செய்ய வேண்டிய விஷயம்.
Rate this:
Share this comment
Cancel
சைவ வீரன் - Delhi,இந்தியா
23-ஜன-202014:57:01 IST Report Abuse
சைவ வீரன் கான் கிராஸ் மற்றும் தீய மு க நாசகார கட்சிகள் என்பதை டுமிழன் என்று உணர்ந்து கொள்வானோ?
Rate this:
Share this comment
Cancel
23-ஜன-202014:49:19 IST Report Abuse
chandran பொறுப்பா நொல்லை கண்ணன் கிட்ட ஒப்படைங்க சார் பேமெண்ட் கரெக்டா குடுத்துட்டா அவர் பார்த்துப்பார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X