வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (9)
Advertisement

இந்த செய்தியை கேட்க

திருவனந்தபுரம்: எஸ்ஐ வில்சனை சுட்டு கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி, எர்ணாகுளத்தில் உள்ள கழிவுநீர் ஓடையில் கண்டெடுக்கப்பட்டது.





குமரி மாவட்டம் களியாக்காவிளை செக்போஸ்ட்டில் பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் வில்சனை அப்துல் சமீம், தவுபீக் என்ற இரு பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர். இருவரையும் 'உபா' சட்டத்தின் கீழ், கைது செய்த குமரி மாவட்ட போலீசார், 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். வில்சனை சுட்டுக்கொல்ல பயன்படுத்திய துப்பாக்கியை, எர்ணாகுளத்தில் ஓடையில் வீசி எறிந்ததாக, இருவரும் வாக்குமூலம் அளித்தனர். இருவரையும் கேரளாவிற்கு அழைத்துச் சென்று, எர்ணாகுளம் பேருந்துநிலையம் அருகே உள்ள கழிவுநீர் ஓடையில் இறங்கி தேடி துப்பாக்கியை கண்டுபிடித்தனர். மேட் இன் இத்தாலி என துப்பாக்கியில் குறிப்பிடப்பட்டிருந்த அந்த துப்பாக்கியில் ஐந்து தோட்டாக்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தது என போலீசார் கூறினர்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் நிலையத்தில், சிறப்பு எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் வில்சன், 57. இவர், கடந்த, 8ம் தேதி இரவு, தமிழக - கேரள எல்லையில் உள்ள, சோதனை சாவடியில் பணியில் இருந்தார். அங்கு சென்ற இரண்டு பேர், வில்சனை துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொன்றனர்.

இந்த கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளான, கன்னியாகுமரி மாவட்டம், அடப்புவிளையை சேர்ந்த அப்துல் சமீம், 29; நாகர்கோவில் கோட்டார் மாலிக் தினார் நகரை சேர்ந்த தவுபீக், 27, ஆகியோரை கர்நாடக போலீசார் கைது செய்தனர். பின், தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இவர்கள் மீது, கொலை, கொலை மிரட்டல் மற்றும் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு பிரிவு என்ற, 'உபா' சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும், கன்னியாகுமரி மாவட்ட போலீசார், 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.




தவுபிக் மற்றும் சமீம் ஆகியோரை போலீசார் கேரளா அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, வில்சலை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை எர்ணாகுளம் பேருந்துநிலையம் அருகேயுள்ள கழிவுநீர் ஓடையில் வீசிவிட்டு சென்றதாக கூறினர். இதனையடுத்து, அவர்கள் கூறியஇடத்திற்கு அழைத்து சென்ற போலீசார், கழிவுநீர் ஓடையில் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-ஜன-202019:33:59 IST Report Abuse
தமிழ்வேல் எல்லா சேதியையும் வாங்கிட்டப்புறம்...............
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
23-ஜன-202017:34:46 IST Report Abuse
தாண்டவக்கோன் அடேய்...என்னடா அரபுக்கள் ஒருத்தனையும் இங்கே காணோம்....
Rate this:
Share this comment
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
23-ஜன-202017:16:47 IST Report Abuse
S.P. Barucha இவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதியை பணி நீக்கம் செய்ய வேண்டும். தீவிரவாத செயல்களை தேசிய புலனாய்வு ஏஜென்சி மட்டுமே விசாரிக்க வேண்டும். மாநில காவல் துறையினர் கூட்டம் சேர்ந்தாலே வழக்கே பதிவு செய்யமாட்டார்கள். இதனால் தான் நாட்டில் தீவிரவாதம் பெருகியது. கோவை குண்டு வெடிப்பு காரணமான தீவிரவாதிகள் சிறையில் நாள் தவறாமல் பிரியாணி சாப்பிடுகின்றனர். இந்த லச்சணத்தில்தான் தீவிரவாதிகள் நடத்தப்படுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X