பொது செய்தி

இந்தியா

அசாமில் 644 பயங்கரவாதிகள் சரண்

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (9)
Advertisement

இந்த செய்தியை கேட்க

கவுகாத்தி: அசாமில் தடை செய்யப்பட்ட 8 அமைப்புக்களைச் சேர்ந்த 644 பயங்கரவாதிகள் இன்று (ஜன.,23) சரணடைந்துள்ளனர்.





உல்பா, என்டிஎப்பி, கேஎல்ஓ உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட 8 அமைப்புக்களைச் சேர்ந்த 644 பயங்கரவாதிகள், அசாம் முதல்வர் சர்பானந்த் சோவால் முன்னிலையில் இன்று சரணடைந்தனர். அவர்கள் தங்களிடம் இருந்த 177 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளனர்.





இது பற்றி டிஜிபி பாஸ்கர் ஜோதி மகந்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், அசாம் போலீசுக்கும், மாநிலத்திற்கும் இது மிக முக்கியமான நாள். 8 பயங்கரவாத அமைப்புக்களைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், படையினர் என 644 பேர் சரணடைந்துள்ளனர். அவர்கள் ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளனர். சமீப காலத்தில் நடந்த பயங்கரவாதிகள் சரணில் இத தான் அதிக எண்ணிக்கை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-ஜன-202020:55:30 IST Report Abuse
Lion Drsekar அடுத்து இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , மத்திய அமைச்சர்கள் இது போன்ற செய்திகளால் தீவிரவாதம் மட்டுமே அதிகமாகும், காரணம், முக்கிய பிரமுகர்களாக வேண்டுமானால் தீவிவரவாதம் மட்டுமே தீர்வு என்ற நிலைக்கு ஆகிவிட்டது, வாழ்க பூலான்தேவி, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Mani iyer Vijayakumar - Coimbatore,இந்தியா
23-ஜன-202020:06:49 IST Report Abuse
Mani iyer Vijayakumar இந்த மாநிலத்தில் ஆளும் .... கட்சி முதல்வரிடம் சரண்ணடைந்தார் என்று இருந்தால் நல்லா இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
23-ஜன-202015:07:49 IST Report Abuse
Dr. Suriya இது மாதிரி நல்ல விஷயம் நடக்கும் போது மட்டும் பி ஜே பி முதல்வர்னு போட மாட்டேங்கிறீங்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X