பொது செய்தி

இந்தியா

பெருமாளுக்கு குடியுரிமை: அர்ச்சகர் கோரிக்கை

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (42)
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஐதராபாத் : புகழ்பெற்ற சில்கூர் கோயிலில் உள்ள கடவுளான பாலாஜி வெங்கடேஷ்வரருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என அக்கோயிலின் தலைமை அர்ச்சகர் கோரிக்கை விடுத்துள்ளார்.






சிஏஏ.,க்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களும், ஏராளமான விவாதங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சில்கூர் கோயிலில் உள்ள பிரதான தெய்வமான பாலாஜி வெங்கடேஷ்வரருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என அக்கோயிலின் தலைமை அர்ச்சகர் ரங்கராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.





மேலும் அவர் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டம் 5(4) பிரிவின் கீழ் மைனருக்கும் குடியுரிமை கோரும் உரிமைகள் உள்ளது. அதனால் அனைத்து கோயில்களில் உள்ள கடவுள்களுக்கும் இந்த சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்க வேண்டும். திருமலை வெங்கடேஷ்வர சுவாமி, சபரிமலை அய்யப்பன், கேரள பத்மநாபசாமி உள்ளிட்ட கடவுள்களுக்கு சிஏஏ.,வின் 5(4) பிரிவின் கீழ் குடியுரிமை வழங்க வேண்டும்.

சபரிமலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, மதச்சார்பற்ற இந்தியாவில் உள்ள இந்து தெய்வங்களின் மத சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும்.

அரசியல் சாசன அமைப்புகள் மற்றும் நீதித்துறையின் தவறான முடிவுகளால் இந்து கோயில்கள், மதங்கள், அறக்கட்டளை அமைப்புக்களை பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றன. மற்ற மதத்தினர் நடத்தும் அமைப்புக்களை போன்று இந்து அமைப்புக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
24-ஜன-202000:23:34 IST Report Abuse
Vena Suna அய்யயோ..இதெல்லாம் கேட்டா தலை சுத்துது...எங்கேந்து இப்படி ஐடியா வருது ?
Rate this:
Share this comment
Balaji - Chennai,இந்தியா
24-ஜன-202008:22:20 IST Report Abuse
Balajiதல சுத்துனா மசக்கையா இருக்கப்போதுன்னு நான் சொன்னா நல்லாவா இருக்கும். அப்புடித்தான் வெவரம் என்னன்னு தெரிஞ்சிக்க முயற்சி பண்ணாமல் கருத்து போடறது. ஆயிரத்து என்னூறுகள்ல இருந்து இந்த நாட்டில் உள்ள, ஆங்கிலேயரால் அமல்படுத்தப்பட்ட, இன்றும் பின்பற்றப்படுகிற சட்டங்கள் ஹிந்து தெய்வங்களை என்ன சொல்லுதுன்னு கொஞ்சம் வெவரம் தெரிஞ்சிக்கினு அப்புறம் பேசு அப்பு.......
Rate this:
Share this comment
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
24-ஜன-202000:13:31 IST Report Abuse
Easwar Kamal அது எல்லாம் செரிங்கய்யா இந்த பெருமாள் கண்டு பிடித்தவர்கள் தமிழ் வழி வந்த ஆழ்வார்கள். கோல்டி தட்டி பறிச்சு அப்படியே உங்கள் கடவுள்னு முத்திரை குத்திட்டிங்க. இதை முதல்ல ஒத்துக்கோங்கோ அப்புறம் மத்ததை பேசிக்கலாம் அப்பு.
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
23-ஜன-202022:10:18 IST Report Abuse
dandy கைநாட்டுகள் டாஸ்மாக் நாடடில் மட்டும் அல்ல ஹைதெராபாத் நகரிலும் உண்டு போலும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X