பொது செய்தி

இந்தியா

ரூ.100 கோடி மான நஷ்டஈடு: அசாருதீன் எச்சரிக்கை

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (24)
Advertisement
MohammadAzharuddin, Azharuddin, Defamation, Threat, TravelAgent, முகமதுஅசாருதீன், அசாருதீன், மோசடி, எச்சரிக்கை

இந்த செய்தியை கேட்க

மும்பை: இந்திய அணி முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகமது அசாருதீன் மற்றும் இருவர் ரூ.21 லட்சம் மோசடி செய்ததாக, மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் போலீசில் டிராவல் நிறுவன உரிமையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார். ஆனால், தன் மீதான புகாரை மறுத்துள்ள அசாருதீன், உரிமையாளர் மீது ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.


வழக்குப்பதிவு


அவுரங்காபாத்தை சேர்ந்தவர் ஷகாப். சுற்றுலா மற்றும் டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் இவர் போலீசில் அளித்த புகாரில்: கடந்த ஆண்டு நவம்பரம் மாதம், அசாருதீனின் உதவியாளர் முஜிப் கான் வேண்டுகோளின்படி, அசாருதீன் மற்றும் சிலர் வெளிநாடு செல்வதற்காக சர்வதேச விமானத்தில் ரூ.20.96 லட்சம் மதிப்புள்ள டிக்கெட்டை பதிவு செய்து கொடுத்தேன்.

இதற்கான பணத்தை பல முறை திரும்ப கேட்டும் கிடைக்கவில்லை. முஜிப் கானுடன் பணிபுரியும் மற்றொரு உதவியாளர் சுதேசை இமெயில் மூலம் தொடர்பு கொண்டேன். அதற்கு அவர் ரூ.10.6 லட்சம் பணம் பரிமாற்றம் செய்ததாக பதிலளித்தார். ஆனால், பணம் கிடைக்கவில்லை. பின்னர் நவ.,24ல் செக் அனுப்பியதாக கூறி , வாட்ஸ் ஆப்பில் செக் ஒன்றின் புகைப்படத்தை சுதேஷ் அனுப்பினார். நவ.,29ல் முஜிப் கானும், இதேபோன்ற புகைப்படத்தை அனுப்பினார். ஆனால், இதுவரை தன்னிடம் செக் வரவில்லை. பணம் ஏதும் கிடைக்கவில்லை எனக்கூறியிருந்தார். மேலும், ஐபிசி சட்டம் 420, 406, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் புகார் அளித்தார். இதனை ஏற்று கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


எச்சரிக்கை
இது தொடர்பாக அசாருதீன், டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியுள்ளதாவது:என் மீதான புகாரில் உண்மையில்லை. புகழ்பெற வேண்டும் என்பதற்காக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆதாரமில்லாமல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனது சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். புகார் அளித்தவர் மீது ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்பேன். இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
27-ஜன-202017:06:31 IST Report Abuse
Vena Suna பணத்தை வாங்காமல் இவன் எதுக்கு டிக்கெட் வாங்கினான் ?
Rate this:
Share this comment
Cancel
Balaji - Chennai,இந்தியா
24-ஜன-202008:27:43 IST Report Abuse
Balaji டிக்கெட் வாங்குனியா இல்லையா? அதுக்கு காசு குடுத்தியா இல்லயா? ஆதாரம் உட அம்புட்டு கஷ்டமா இந்த சோசியல் மீடியா உலகத்துல? அத்த விட்டுட்டு நூறு கோடி எரநூறு கோடி னு பேசிகிட்டு.
Rate this:
Share this comment
Cancel
Mohan Kumar - chennai,இந்தியா
24-ஜன-202007:42:56 IST Report Abuse
Mohan Kumar You, third rate ...... once said that since I am a Muslim, I am ........ .. and no one objected at that time. Such a mean one, thrown out from .........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X