அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக., - ரஜினி - அமைச்சர்கள்: கலகலக்கும் தமிழக அரசியல்

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (87)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை : "அதிமுக.,வில் அனைவரும் முதல்வர்கள்"என முதல்வர் பழனிசாமி பேசியதை விமர்சித்து வரும் திமுக.,விற்கு அமைச்சர் ஜெயக்குமாரும், ஈவேரா குறித்து ரஜினி பேசியதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூவும் பதிலளித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தை கலகலக்க வைத்துள்ளது.latest tamil news


மதுரை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமை, அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ரஜினி தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்ததற்கு பெரியார் கொள்கை தான் காரணம். ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள். எங்களுக்கு அறிவுரை சொல்லும் துரைமுருகன், திமுக தலைவராக ஆக முடியுமா? ஸ்டாலின் அதற்கு சம்மதிப்பாரா என, கேள்வியெழுப்பினார்.

துரைமுருகன் தலைவராக முடியுமா?: கடந்த வாரம் சேலத்தில் பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, அதிமுக.,வில் அனைவரும் முதல்வர்கள் தான். சாதாரண தொண்டன் கூட ஒருநாள் முதல்வராக முடியும் என்றார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக துரைமுருகன், அப்படியானால் முதல்வர் பதவியை ஓபிஎஸ்.,க்கு விட்டு தர முதல்வரா தயாரா? என கேள்வி எழுப்பினார். துரைமுருகனின் இந்த பேச்சு குறித்து, நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்த வந்த ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


latest tamil news
அதற்கு பதிலளித்த அமைச்சர், "உள்ளாட்சித் தேர்தல் என்பது ஒரு இடைவேளைதான். அதிமுக தான் எப்போதும் ஹீரோ. 2021 ம் ஆண்டு கிளைமாக்ஸில் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதிமுகவில் உள்ள நாங்கள் யாரும் மிட்டா மிராசுதாரர் கிடையாது.

பெரிய பாரம்பரியத்தை பின்னணியாக கொண்டவர்கள் இல்லை. நாங்கள் கொடி வைத்த காரில் வலம் வர எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தான் காரணம். அதிமுகவில் கட்சிக்காக கடுமையாக உழைக்கும் அடிமட்ட தொண்டனும் உயர் பதவிக்கு வர முடியும். திமுகவில் அப்படி நடக்குமா? இல்லை, துரைமுருகன் தான் கட்சி தலைவராக ஆக முடியுமா? இல்லை, ஸ்டாலின் தான் முதல்வர் பதவி துரைமுருகனுக்கு என அறிவிப்பாரா? " என பதில் கேள்வி எழுப்பி உள்ளார்.

தவறாக வழிநடத்தப்படும் ரஜினி : ஈவேரா குறித்து ரஜினி பேசியது குறித்த கேள்விக்கு மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, 95 வயதிலும் சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்காக பாடுபட்டவர் ஈவேரா. மாபெரும் தலைவரின் போராட்டத்தை, பெருமையை சீர்குலைத்து பேசுவது தவறானது. நடிகர் ரஜினிகாந்த், தனது இரண்டாவது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிந்தது என்றால், அதற்கு ஈவேரா.,வின் கொள்கை தான் காரணம். எப்பொழுதும் பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள். முதல்வர் பதவியை விட்டுக்கொடுப்பது பற்றி பேசும் துரைமுருகனுக்கு, திமுக தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க ஸ்டாலின் தயாரா? என்றார்.
அமைச்சர்களின் இந்த சரமாரி கேள்வி மற்றும் பதில் தாக்குதலால் தமிழக அரசியல் கலகலப்பாகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-ஜன-202010:10:47 IST Report Abuse
Mani . V லூசுக் கூட்டங்கள்.
Rate this:
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
24-ஜன-202010:08:15 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா பிராமண எதிர்ப்பை உருவாக்கியவர் வள்ளலார், சொறியான் அல்ல... சாதியொழிப்பை, சமூகநீதி மீட்பை உருவாக்கியவர் வைகுண்டர். சொறியான் அல்ல.... சமூகவிடுதலையை உருவாக்கியவர்கள் அயோத்திதாசரும் இரட்டைமலை சீனிவாசனும். சொறியான் அல்ல.... கருத்தியல் புரட்சியை உருவாக்கியவர்கள் பாவலரேறு பெருஞ்சித்திரனார், மாபொசி, கிஆபெ போன்றவர்கள். சொறியான் அல்ல... தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று நூற்றுக்கணக்கான தமிழ் நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றி புதுப்பித்துத் தந்தவர் சு.வே‌சாமிநாத ஐயர். சொறியான் அல்ல... மண் காப்பு போராட்டத்தை உருவாக்கியவர் நம்மாழ்வார். சொறியான் அல்ல.... வாயால் வடை சுட்டதை தவிர வேறு எதையும் கிழிக்கவில்லை சொறியான்... இதையெல்லாம் வசதியாக மறைத்துவிட்டு... கைத்தடி... வெந்தாடி... வெங்காயம்... பெருங்காயம் என்று ஊரை ஏமாற்றாதீர்கள்... ஒரு வரியில் சொல்லனும் என்றால் "அந்நாளைய சீமான்" தான் இந்த ஈவேரா. காசு கொடுத்தால் யாரை பற்றியும் பேசுவார். காசே பிரதாணம்.அப்படி கஷ்டபட்டு சேர்த்த சொத்தை இன்று அனுபவிப்பவன் ஓசிசோறு மணி...
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
24-ஜன-202010:00:43 IST Report Abuse
RajanRajan பெரியானை வச்சு சுடலை கொதிக்கிறாரா அல்லாட்டி கதிகலங்குறாரோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X