திருமணத்திற்கு வற்புறுத்திய காதலி: தப்பிக்க போலீசிடம் சிக்கிய காதலன்

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (5)
Advertisement
China, AvoidMarriage, StealSpeaker, Girlfriend, Shanghai, Arrest, சீனா, ஷாங்காய், காதலி, காதலன், ஸ்பீக்கர்திருட்டு, கைது, திட்டம்

இந்த செய்தியை கேட்க

ஷாங்காய்: சீனாவில் திருமணத்திற்கு காதலி வற்புறுத்தியதால் அதிலிருந்து தப்பிக்க நினைத்த காதலன், வேண்டுமென்றே போலீசிடம் சிக்க திட்டமிட்டு ஸ்பீக்கரை திருடியுள்ளார்.

காதல், சிலருக்கு எளிதாகவும், சிலருக்கு கடினமாகவும் கைக்கூடிவிடுகிறது. பலருக்கு அது எட்டாக்கனியாகவே இருக்கிறது. ஒருதலையாக காதலித்து, அதனை காதலன் / காதலியிடம் வெளிப்படுத்தி சம்மதம் பெற்று, குடும்பத்தார்களின் ஒப்புதல் பெற்று திருமணம் செய்வதற்கு பலரும் படாதபாடு படுகின்றனர்.

அப்படி இருக்கையில், சீனாவில் திருமணம் செய்துக்கொள்ள காதலி சம்மதித்தும் அதில் இருந்து தப்பிக்க வித்தியாசமான திட்டத்துடன் செயல்பட்ட காதலன் 'ஜாலியாக' போலீசிடம் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.




சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள நடன ஸ்டூடியோவில் நுழைந்த சென் என்ற இளைஞர், அங்கிருந்த ரூ.17,000 மதிப்புள்ள புளுடூத் ஸ்பீக்கரை திருடினார். அவரை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். சென் கூறுகையில், என் காதலி என்னை திருமணம் செய்துக்கொள் என தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். எனக்கு அவரை திருமணம் செய்ய விருப்பமில்லை. அதிலிருந்து தப்பிக்க போலீசார் என்னை பிடித்துவிடும் எனத்தெரிந்தே வேண்டுமென்றே ஸ்பீக்கரை திருடினேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை, என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
24-ஜன-202001:41:35 IST Report Abuse
TAMILAN அருமை
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23-ஜன-202019:53:15 IST Report Abuse
Natarajan Ramanathan சீனாவில் பெண்கள் ஆதிக்கம் மிக அதிகம் திருமணம் செய்தாலும் செய்யாவிட்டாலும் இவனுக்கு மாமியார் வீடுதான் கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
23-ஜன-202015:13:09 IST Report Abuse
blocked user சீனாவில் சிறிய குற்றங்களுக்குக்கூட பெரிய தண்டனை உண்டு.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-ஜன-202019:31:33 IST Report Abuse
தமிழ்வேல் தண்டனை வாழ்நாள் முழுதுமா ?...
Rate this:
Share this comment
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
23-ஜன-202019:37:46 IST Report Abuse
கல்யாணராமன் சு.அவரை அப்படியே தமிழ்நாடு பக்கம் தள்ளிவிட்டா, இங்கே ஒரு பெரிய கட்சித்தலைவராவோ, இல்லே அதுக்கும் மேல மந்திரியாவோ (முதல் மந்திரியாக்கூட), ஆகிவிடுவார் ..............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X