நிர்பயா வழக்கில் தூக்கு வழங்கிய நீதிபதி இடமாற்றம்

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (15)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கிய டில்லி கோர்ட் கூடுதல் நீதிபதி சதிஷ் குமார் அரோரா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


டில்லியில் 2012 ம் ஆண்டு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு டில்லி பாட்டிலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ஜன.,7 ம் தேதியன்று, குற்றவாளிகள் 4 பேரையும் ஜன.,22 ம் தேதியன்று காலை 7 மணிக்கு தூக்கிலிட டில்லி கோர்ட் உத்தரவிட்டது.

இதற்கு முன் சுப்ரீம் கோர்ட் உள்ளிட்ட பல கோர்ட்களில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. நீண்ட போராட்டத்திற்கு பிறகு இவ்வழக்கில் நீதிபதி சதிஷ்குமார் அரோரா தலைமையிலான அமர்வு, தூக்கு தண்டனை வழக்கியது. இந்த உத்தரவை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த தீர்ப்பை வழங்கியதற்காக நீதிபதி அரோராவுக்கு பலரும் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்தனர்.
இந்நிலையில் டில்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் கூடுதல் நீதிபதியாக உள்ள நீதிபதி அரோரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஓராண்டிற்கு சுப்ரீம் கோர்ட் கூடுதல் பதிவாளராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதிநிதித்துவ அடிப்படையில் இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
26-ஜன-202006:52:38 IST Report Abuse
skv srinivasankrishnaveni இந்தமாதிரி நேர்மையே இல்லாதவாளுக்கு நீதியே கிடைக்காது இந்தநாய்களை வெளியே விட்டால் இவனுக போலீசுலேந்து சகல வீட்டுபொண்ணுகளையும் நாசம் செய்து கொலையும் செய்வானுக பார்த்துண்ணே இருங்க
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஜன-202011:24:24 IST Report Abuse
skv srinivasankrishnaveni அடப்பாவிகளா என்னடா இது நீதி நேர்மையே இல்லாம செயல்படுறது உங்களுக்கே நியாயமா அடுக்குமா கடவுளுக்குமே பொருக்காதுடா நாசமாபோகப் போறீங்க அந்த நாய்களை எங்கோனுண்டெர் லே போட்டுத்தள்ள ஒரு நேர்மையான அதிகாரி உடனே தேவை அரசாங்கமும் என்னாத்துக்கு வீண் சிலவு முன்னாள் ஆட்ச்சி செய்தவாளிடையே நிறைகோடீஸ்வரா இருக்கலாமா அவா வீட்டுலே வேளைக்கு சேர்க்கவும் இந்தநாய்களுக்கு இலவசமா எல்லாம் கிடைக்கும் நாசமாப்போக இந்த நாய்களை காக்குறதுக்குப்பதிலா நாய்களை வளர்த்தால் நல்லது இதுகளை உடனே கொலை செய்யவேண்டும் ரேப் செய்றானாய் எவன் என்றாலும் உடனே தூக்கு தண்டனை நோ கேசு வழக்கு விஜயரனை இல்லாதைக்கு
Rate this:
Share this comment
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
24-ஜன-202010:34:30 IST Report Abuse
Ashanmugam கேடு கெட்ட இந்திய ஜனநாயக நாட்டில், கேடு கெட்ட அரசியல்வாதிகளின் அதிகார திமிர்தனத்தால் நியாயத்திற்கும், தர்மத்திற்கும் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை இடம் மாற்றம் செய்தது தெய்வகுற்றமாகும். இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்த அதிகாரிக்கு கூடிய விரைவில் இறைவன் அவர் தீர்ப்பை வழங்குவார்.
Rate this:
Share this comment
CHINTHATHIRAI - TUTICORIN,இந்தியா
25-ஜன-202008:49:34 IST Report Abuse
CHINTHATHIRAIA. shanmugam is correct. Judicial officer is more than any religion. In india all religious personalities worship the court. Even I had experienced that those Judicial officers who ever are corrupt and not doing their official duty in time was punished by all the God's in India. Killing the precious time of litigants is a devine offence. Some corrupt judicial officers expired during their service period also. Pray God for Conscient Judicial officers.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X