370 ரத்தை திரும்ப பெற முடியாது: மத்திய அரசு உறுதி

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (10)
Advertisement
kashmir, supremecourt, sc, 370, காஷ்மீர், சிறப்பு அந்தஸ்து, உச்சநீதிமன்றம், சுப்ரீம்கோர்ட்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் அந்த மாநிலம், இந்தியாவுடன் இணைந்துள்ளது. இந்த நடவடிக்கை திரும்ப பெற முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, மத்திய அரசு நீக்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. வழக்குகளை நீதிபதிகள் என்வி ரமணா, எஸ்கே கவுல், ஆர் சுபாஷ்ரெட்டி பிஆர் காவல் மற்றும் சூரிய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.




அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், காஷ்மீர் எப்படி இந்தியாவுடன் இணைந்தது என்பதை விளக்கியதுடன், 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது திரும்ப பெற முடியாது. காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி எனக்கூறினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜிவ் தவான் கூறுகையில், அரசியல்சட்டம் 3வது பிரிவை பயன்படுத்தி, ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மத்திய அரசு மாற்றியுள்ளது. ஒரு மாநிலத்தை மாற்றியுள்ள மத்திய அரசு, தொடர்ந்து மற்ற மாநிலங்களையும் மாற்றும் வாய்ப்பு உள்ளது. காஷ்மீரில் வேண்டுமென்றே ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
24-ஜன-202007:06:25 IST Report Abuse
blocked user வீட்டுக்காவலில் இருக்கும் காஷ்மீர் அரசியல் குப்பைகளை அப்படியே கடலில் கொட்டி விடலாம். அவர்கள் வெளியே வந்தால் குழப்பங்களை மட்டுமே உருவாக்குவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
24-ஜன-202001:38:13 IST Report Abuse
Allah Daniel இந்த கோர்ட்டுக்கு வேற வேல இல்லை....
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
23-ஜன-202020:57:40 IST Report Abuse
தாண்டவக்கோன் மோதி ன்னா மோதி தான்.. ஏன் பிஜேபி பின்னாடி கொடி புடிக்கிறோம்...தலைவன் சரியா இருக்கிறான்...அதான்.. தலைவனுக்கு இணை ..இனிமேதான் இன்னொருத்தன் பொறந்து வரணும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X