தேசபக்தியுள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கணும்: ப.சிதம்பரம்

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (157)
Advertisement
Chidambaram, DemocracyIndex, PatrioticIndian, Warn, Tweet, Congress, சிதம்பரம், ஜனநாயககுறியீடு, ஜனநாயகம், பட்டியல், சரிவு, எச்சரிக்கை, தேசபக்தி, இந்தியர்கள், டுவிட்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ஜனநாயகம் அழிக்கப்படுவதால் தேசப்பக்தியுள்ள ஒவ்வொரு இந்தியர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காங்., எம்பி., ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'தி எகனாமிஸ்ட்' இதழின் புலனாய்வு பிரிவு, கடந்தாண்டுக்கான சிறந்த ஜனநாயக நாடுகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.அதில், 2018ல், 41வது இடத்தில் (7.23 புள்ளிகள்) இருந்த இந்தியா, 2019ம் ஆண்டு, 51வது இடத்துக்கு (6.90 புள்ளிகள்)தள்ளப்பட்டுள்ளது. 'சிவில் லிபர்டி' எனப்படும், குடிமக்களின் உரிமை மீறப்பட்டதால், 10 இடங்கள் சரிந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து காங்., எம்.பி., ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்தியா ஜனநாயக குறியீட்டில் 10 இடங்கள் சரிந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனிக்கும் அனைவருக்கும், ஜனநாயகம் அழிக்கப்பட்டு, ஜனநாயக அமைப்புகள் பலவீனமடைந்துள்ளன என்பது தெரியும். இந்தியா செல்லும் திசையை நினைத்து உலகமே திகைத்துள்ளது. தேசபக்தி உள்ள ஒவ்வொரு இந்தியரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (157)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya ,இந்தியா
24-ஜன-202017:17:25 IST Report Abuse
Rajan இவன் ரொம்ப நல்லவன்
Rate this:
Share this comment
Cancel
King of kindness - muscat,ஓமன்
24-ஜன-202011:37:54 IST Report Abuse
King of kindness கொஞ்சம் அசந்தா நாட்டையே பாகிஸ்தானுக்கே வித்து இருப்பாய். நீயெல்லாம் பக்தி பத்தி பேசுறே. முதல்ல சிவகங்கை தொகுதிக்கு நீ விசுவாசமா இரு. சிவகங்கை பேருந்து நிலையமே சொல்லும் நீ அங்கே என்ன செஞ்சிருக்கே என்று.-
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
24-ஜன-202010:21:48 IST Report Abuse
Indhuindian இப்போ திக் விஜய் சிங்க், மனிஷ் திவாரி, மணி சங்கர் ஐயர், அபிஷேக் மனு சிங்க்வி, கபில் சிபல் போன்ற காங்கிரஸின் அடிவருடிகள் அடங்கிவிட்டார்கள் இப்போ இவரை உசுப்பேத்தி விட்டிருக்காங்க உடம்பு ரண களம் ஆகப்போகுது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X