குடியுரிமை சட்டமும், என்ஆர்சியும் ஜனநாயகத்திற்கு நல்லது: கருத்து கணிப்பு

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (38)
Advertisement

புதுடில்லி: குடியுரிமை சட்டமும், என்ஆர்சியும் ஜனநாயகத்திற்கு நல்லது என இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.






பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் குடியுரிமை சட்டம் மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து விலக்கியது குறித்து இந்தியா டுடே சார்பில் மூட் ஆப் நேசன் மற்றும் ஹார்வி சர்வே இணைந்து கருத்து கணிப்பை நடத்தியது.





இந்த கருத்து கணிப்பு 19 மாநிலங்களில் ஒன்பது லோக்சபா தொகுதிகள், மற்றும் 194 சட்டசபை தொகுதிகளில் சுமார் 12 ஆயிரத்து 141 பேரிடம் கருத்து கணிப்பை நடத்தியது.

இதில் ஊரகப்பகுதிகளில் 67 சதவீதத்தினரும், நகர்புறங்களில் 33 சதவீதத்தினரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.





இந்த கருத்து கணிப்பில் குடியுரிமை திருத்த சட்டம் நல்லது என 41 சதவீத்தினரும் , இல்லை என 25 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர். என்ஆர்சி ஜனநாயகத்திற்கு நல்லது என49 சதவீதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். என் ஆர்சிக்கு ஆதரவு அளிக்கவில்லை என 43 சதவீதத்தினரும் , 25 சதவீதத்தினர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.





வேலை இல்லா திண்டாடத்தை திசை திருப்புவதற்காக சிசிஏ, என்.ஆர்.சி கொண்டு வரப் பட்டு உள்ளதாக 43 சதவீதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் பா.ஜ., மற்றும் இளைஞர்களிடையே தொடர்பு இல்லை என 42 சதவீதம் பேரும் ,33 சதவீதத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்தும் 25 சதவீத்தினர் கருத்து கூற விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். சிறுபான்மையினர் 53 சதவீதம் பேர் உரிய பாதுகாப்பு இல்லை . இவ்வாறு அந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-ஜன-202013:09:52 IST Report Abuse
Malick Raja காலமெல்லாம் கருத்துக்கணிப்பு போட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான் .. கடந்த மாதம்வரை பங்களா தேஷிலிருந்து ஆட்கள் கோயம்புத்தூர் வந்து வேலைசெய்துவிட்டு திரும்பவும் தாய்நாடு சென்று வருவதென்பது எப்படி என்றே புரியவில்லை .. எல்லை பாதுகாப்பு படை என்ன செய்கிறார்கள் .. யாராவது கேட்கிறார்களா ? ஆட்சியாளர்கள் சிந்திக்கிறார்களா ? இரண்டு மூன்று தடவை வந்து போவான் பின்னர் இங்கே தங்கிவிடுவான் .. ஆக நாட்டின் பாதுகாப்பில் ஓட்டை இருப்பது உண்மை .. இதையெல்லாம் கவனிக்கமுடியாத அரசு CAA..NPR.. போன்றவைகளை கொண்டுவந்து என்ன பயன் .. வந்தவன் பூர்வாங்க குடிமகனை போன்று ஆதாரங்கள் சேகரிக்கிறான் . இங்கு பிறந்த உண்மையானவர் ஆதாரங்களை சேகரிக்க முடியாமலிருப்பது வேடிக்கை அல்லவா ? ஆக வெளியே பயிரை மேயும் நிலையை ஒழிக்கவேண்டும் ..
Rate this:
Share this comment
Cancel
24-ஜன-202014:21:55 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் வெளிநாட்டில் இருந்து ஊடுருவி வந்த ஆட்கள் , அவர்களை வைத்து இங்கே வேலை வாங்கும் ஆட்கள் மட்டுமே பீதியில் உள்ளனர். மற்றவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
24-ஜன-202012:51:36 IST Report Abuse
konanki அமெரிக்காவின் விசா அதிகாரிகள் வைத்தது தான் சட்டம். அவர்கள் விசா வழங்கும் போது முஸ்லிம் பெயர் என்று நினைத்தால் விசா மறுப்பு. முஸ்லிமாக இருக்க வேண்டியதில்லை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X