எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி தலைவர்களால், கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்க முடியுமா ?

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (1)
Advertisement
கட்டுமானதிட்டம், அனுமதி, ஊராட்சிதலைவர்கள்,

ஊரக பகுதிகளில் பதவிக்கு வந்துள்ள, புதிய ஊராட்சி தலைவர்களால், கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்க முடியுமா என்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, உரிய வழிகாட்டுதல்களை, நகர், ஊரமைப்புத்துறை வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், 23 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடவடிக்கைகள் முடிந்துள்ளன. இதில், 9,622 ஊராட்சி தலைவர் பதவி இடங்களில், 9,621 இடங்களுக்கு, புதிய தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர், அரசியல் கட்சிகளின் பின்னணியில் வந்துள்ளனர். முதல் முறையாக, 50 சதவீத இடங்களில், பெண்கள் தலைவர்களாக வந்துள்ளனர்.

இவர்கள், பொதுவாக அந்தந்த பகுதிகளில், அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்னைகளை தீர்க்கவே கவனம் செலுத்துவர்.தற்போது, அமலுக்கு வந்துள்ள, பொது கட்டட விதிகளின்படி, ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், 7,000 சதுர அடி பரப்பளவு வரையிலான கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கலாம்.

இதற்கான அதிகார பகிர்வை, உள்ளாட்சிகளுக்கு வழங்கி, டி.டி.சி.பி., எனப்படும், நகர், ஊரமைப்பு துறை, 2019 செப்டம்பர், 24ல் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் செயல்பட, புதிய ஊராட்சி தலைவர்கள் அதிகாரம் பெறுகின்றனர். ஆனால், ஊராட்சி தலைவர்கள், கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில், தொழில்நுட்ப ரீதியான சிக்கல்கள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு வருபவர்கள் அனைவரும், தொழில்நுட்ப ரீதியாக, கட்டுமான திட்ட அனுமதிக்கான ஆவணங் களை ஆய்வு செய்ய கூடியவர்களாக இருப்பர்என்று,எதிர்பார்க்க முடியாது. எனவே, இவர்களுக்கு உதவ, ஊராட்சிகளில் பொறியாளர்கள், நகரமைப்பு வல்லுனர்களை நியமிக்கும் படி, மத்திய அரசு, 2012ல் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு, தமிழகத்தில் நிறைவேற்றப்படவில்லை. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பொறியாளர்கள் இருப்பர். ஆனால், ஊராட்சிகளில் எழுத்தர் நிலையிலேயே அலுவலர்கள் உள்ளனர்.இந்த பின்னணியில், புதிய ஊராட்சி தலைவர்கள், இப்பிரச்னையை எப்படி எதிர்கொள்ள போகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்க, டி.டி.சி.பி., முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

-- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
24-ஜன-202015:40:21 IST Report Abuse
Harinathan Krishnanandam கூட்ட முடிவுக்கு ஒப்புதல் கையெழுத்து போடுவது மட்டுமே ஊராட்சி தலைவர்கள் வேலை என்றால் தேர்தலுக்கு யாருமே போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து இருக்க மாட்டோம் அதிகாரம் இல்லாத ஊராட்சி தேர்தல் ஒழிக
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X