பொது செய்தி

தமிழ்நாடு

உழவன் செயலியில் 3 புதிய சேவைகள்

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 23, 2020
Advertisement
 உழவன்செயலி, 3 புதிய சேவைகள்

சென்னை: 'உழவன் செயலியில், புதிதாக மூன்று சேவைகள் சேர்க்கப்பட்டு உள்ளன' என, வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார். அவரது அறிக்கை:
தகவல் தொழில்நுட்பம் வாயிலாக, முக்கிய தகவல்களை விவசாயிகளிடம் சேர்ப்பதில், தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. புதிய சேவைகள்அதன்படி, 2019ல், உழவன் என்ற கைபேசி செயலி, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐந்து லட்சம் பேர், இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

இடுபொருட்களை மானியத்தில் பெற, இந்த செயலி வாயிலாக, 88 ஆயிரத்து, 987 விவசாயிகள் முன்பதிவு செய்துள்ளனர். பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தில், தகுதியான விவசாயிகள் தங்களை இணைத்துக் கொள்வதற்கான சேவை, உழவன் செயலில், ஒரு வாரத்திற்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 'என் பண்ணை வழிகாட்டி, இயற்கை பண்ணையம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்' என, மூன்று புதிய சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. பயன் என்ன? 'என் பண்ணை வழிகாட்டி' சேவை வாயிலாக, விதைப்பு முதல் அறுவடை வரையிலான, சாகுபடி முறைகளை விவசாயிகள் அறிந்து கொள்ள முடியும். பூச்சி தாக்குதல் குறித்து புகார் அளித்தால், எஸ்.எம்.எஸ்., வாயிலாக, தீர்வு அனுப்பப்படும்
* 'இயற்கை பண்ணையம்' சேவை வாயிலாக, மாநிலத்தில் உள்ள இயற்கை பண்ணைகளின் விவசாயிகள் பெயர், விற்பனையாளர் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ளலாம்

* 'உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்' சேவை வாயிலாக, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த முடியும். உழவர் உற்பத்தியாளர் பற்றிய விபரங்களும் பெறலாம். உழவன் செயலில் அறிமுகம் செய்யப் பட்டுள்ள, இந்த மூன்று புதிய சேவைகளை விவசாயிகள் பயன்படுத்தி, பயன் அடைய வேண்டும். இவ்வாறு, ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X