சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜன 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல், இந்தியாவில், முழுமையான சமூக நீதியை உறுதி செய்ய முடியாது என்பது தான், பா.ம.க., நிலைப்பாடு. எனவே, 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரியாக மேற்கொள்ள மத்திய அரசு முன் வரவேண்டும்; இதற்காக, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.'டவுட்' தனபாலு: தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, நீங்கள் நீண்ட காலமாக கோரி வருகிறீர்கள். இதன் பின்னணியில், இரண்டு விஷயங்கள் இருக்குமோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. ஒன்று, உங்கள் ஜாதியில் எத்தனை பேர் இருக்கின்றனர் என்ற ஆர்வம். இரண்டாவது, 'வட மாவட்டங்களில், எங்கள் ஜாதியினர் தான் அதிகமாக உள்ளனர்; அதனால், எங்கள் ஜாதியினருக்கு, தேர்தலில் போட்டியிட கூடுதல் பிரதிநிதித்துவம் வேண்டும்' என, ஆதாரப்பூர்வமாக கோர விரும்புகிறீர்களோ என்ற, 'டவுட' உள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி: 1992, டிச., 6ல், பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து, 'துக்ளக்' வார இதழ் அட்டையில், கருப்பு வர்ணத்தை பூசி, தலையங்கத்தில், 'அயோத்தியில் நடந்த அயோக்கியத்தனம்' என, சோ விமர்சனம் செய்ததை, ரஜினி ஏன் நினைவு கூறவில்லை... ஜெ., ஆட்சியை அகற்ற, 1996ல், தி.மு.க., - த.மா.கா., கூட்டணி அமைய, சோ துணை புரிந்ததை, ரஜினி ஏன் சுட்டிக்காட்டவில்லை? இவற்றை மறைத்து விட்டு, மறக்கக் கூடாத சம்பவமாக, 1971ல் நடந்ததை மட்டும் கூறியது ஏன்?'டவுட்' தனபாலு: நீங்களும் தான், உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில், தி.மு.க.,வை எதிர்த்து அறிக்கை வெளியிட்டதற்கு, தி.மு.க., கடும் கண்டனம் தெரிவித்தது; கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என்றும் கூறியது. அதற்குப் பிறகும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து, வருத்தம் தெரிவித்து, வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்த போது, தர்பார் படம் குறித்து பேசினோம் என்றீர்களே; அதுபோலத் தான், ரஜினியும் பேசியிருப்பாரோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.
தமிழக கதர் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன்: பா.ஜ.,விலிருந்து பிரிந்து செல்ல, தக்க நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். எங்கள் அமைச்சரவையிலே, குடியுரிமை சட்டத்திற்கு எல்லாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முஸ்லிம் மக்களாகிய நீங்கள் தான், தேர்தலின் போது ஓட்டளிக்காமல், ஒதுக்கி விட்டீர்கள்; நாங்கள் உங்களை ஒதுக்க மாட்டோம்.'டவுட்' தனபாலு: நீங்களும் தான், மூன்றாண்டுகளுக்கும் மேலாக, தமிழக அமைச்சரவையில் உள்ளீர்கள். தலைநகரில் உள்ள அதிகாரிகள் துவங்கி, குக்கிராமங்களில் உள்ள மாநில அரசு அதிகாரிகள் வரை, யாருக்கும் உங்களைத் தெரியவில்லை. பிரபலமாக ஒரே வழி, 'வெட்டு ஒண்ணு; துண்டு ரெண்டு'ன்னு பேசுவது தான் என நினைத்து, இவ்வாறு பேசினீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
24-ஜன-202018:31:41 IST Report Abuse
karutthu தமிழக கதர் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன்: இப்படி ஒரு அமைச்சர் இருப்பதே இப்போதான் தெரியுது ........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X