கிளப்புறாங்கய்யா...!

Added : ஜன 23, 2020
Share
Advertisement

காதலும் கடந்து போகும்!

ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு சீனப் பெண்ணின் மீது காதல் மலர்ந்தது. இருவரும் நேரில் சந்திக்காமலேயே காதலித்து வந்த நிலையில், காதலியை பார்த்துவிட வேண்டும் என எண்ணினார், அந்த இளைஞர். அதற்காக, கரடி பொம்மை வேஷம் போட்டுக்கொண்டு, கடல் கடந்து, 2,400 கி.மீ., பயணம் செய்து காதலியை நேரில் சென்று சந்தித்தபோது, அவரது இதயமே நொறுங்கி போனது. ஏனெனில், அந்த இளம்பெண் வேறு ஆணுடன் நெருக்கமாக நின்று கொண்டிருந்தார். இதை பார்த்ததும், தன் முகமூடியை கழற்றி வீசி ஏறிந்துவிட்டு, கோபத்துடன் திரும்பிச் செல்கிறார். உடனே, இளம்பெண் அவரை சமாதானம் செய்வதற்காக ஓடுகிறார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகிய நிலையில், நெட்டிசன்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.குட்டி சுட்டியின் டிக்டாக்!இன்றைய சூழலில், டிக் டாக் மோகம் பல தரப்பட்ட மக்களையும் ஆட்டி படைத்து வருகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக, இளைஞர்களை காட்டிலும் குழந்தைகளின் டிக் டாக் வீடியோக்கள், பலரையும் ஈர்ப்பதால், டிரெண்டாகி விடுகிறது. அந்த வகையில், ஒரு குட்டி சிறுமி, இந்தி பாடலுக்கு தனது நடிப்பை வெளிப்படுத்திய வீடியோ காட்சிகள் வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்து ட்விட்டர் வாசிகள் பலரும், எதிர்காலத்தில் சிறந்த நடிகையாக வர வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

கண்டுபிடிங்க பார்க்கலாம்!

சமூக வலைதளங்களில் சில நேரங்களில், வித்தியாசமான புகைப்படங்கள் நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடுகின்றன. அதுபோன்ற ஒருபடம்தான் இதுவும். இதை பார்த்ததும், காகம் என்று நினைத்தவர்கள், மீண்டும் கூர்ந்து கவனித்தால் மட்டுமே உண்மை புரியும். ஏனெனில், இது ஒரு பூனையின் புகைப்படம். கருப்பு பூனை தலைதிருப்பி பார்க்கும்போது புகைப்படம் எடுக்கப்பட்டதால், அதன் காது காக்காவின் மூக்கு போல் தெரிகிறது. இதனால், குழம்பிய நெட்டிசன்கள் பலரும், உண்மை புரிந்து குபீர் சிரிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

வானில் கருநிற வளையம்
பாகிஸ்தான், லாகூர் சாலையில் வாகன ஓட்டி ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, வேகமாக பகிரப்பட்டும் வருகிறது. வீடியோவில், வான் பகுதியில் மிகப்பெரிய கருப்பு நிற வளையம் போன்ற வடிவம் நகர்ந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஹாலிவுட் திரைப்படங்களில் விண்வெளி மனிதர்களின் விமானமாக காட்டப்படும் சாதனம் போல் அந்த வளையம் இருப்பதை சுட்டிக்காட்டி, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலரோ, ஏதேனும் ஆலையில் இருந்து வெளியேறிய புகையின் வடிவம் என்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X