நிறைவேறியது ‛பிரெக்சிட்' மசோதா; பிரிட்டன் ராணி ஒப்புதல்

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (3)
Advertisement
Brexit,Britain,BorisJohnson,Queen, பிரெக்சிட், பிரிட்டன், ராணி, போரிஸ்_ஜான்சன்

லண்டன் : ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான ‛பிரெக்சிட்' மசோதா அந்நாட்டு பார்லியில் இன்று(ஜன.,23) நிறைவேறியது. பிரிட்டன் ராணியும் ஒப்புதல் அளித்தார்.


ஓட்டெடுப்பு:


ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்காக அமைக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில், 28 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக, பிரிட்டன் அறிவித்தது. இது தொடர்பாக, 2016ல், மக்களிடம் கருத்து கேட்டு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது.

அதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் துவங்கின. ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு, பார்லி.,யில் போதிய ஆதரவு இல்லாத நிலையில், இரண்டு முறை பார்லி.,க்கு தேர்தல் நடந்தது. இரண்டு முறை பிரதமர்கள் மாறினர்.






எப்போது:


தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியால், ‛பிரெக்சிட்' மசோதா அந்நாட்டு பார்லி.,யில் இன்று(ஜன.,23) நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். அதனையடுத்து வரும் ஜன.,31ம் தேதி, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது. இதைக் கொண்டாடும் வகையில், பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சிறப்பு நாணயம்:


பிரெக்சிட் வெற்றியை குறிக்கும் வகையில், 31ம் தேதி இரவில், சிறப்பு நாணயம் வெளியிடப்பட உள்ளது. அதில், 'அனைத்து நாடுகளுடனும் அமைதி, வளம் மற்றும் நட்பு' என, குறிப்பிடப்பட உள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து, வரும், 31ம் தேதி பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேற உள்ளது. இருப்பினும் மற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் முடிக்க, இந்தாண்டு இறுதி வரை அதற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாடகைபாக்கி சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
24-ஜன-202001:50:46 IST Report Abuse
வாடகைபாக்கி  சொடலை இளவரசர் ஹாரி அரண்மனை விட்டு விலகியது ஹரிக்ஸிட் என்று அழைப்பார்களா ?
Rate this:
Share this comment
Cancel
G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்
24-ஜன-202001:02:17 IST Report Abuse
G.BABU ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை தடுப்பதற்கு அவர்கள் கடைசியாக எதிர்பார்த்த ஓர் நிகழ்வு அவர்களது விருப்பத்திற்கு எதுவாக நடக்கவில்லை. அது நடந்து முடிந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றிபெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பே. ஒவ்வொருமுறையும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்த பிரெக்ஸிட் மசோதா இவர்களால் தோற்கடிக்கப்படும் போதும் .....அதனைத்தொடர்ந்து பிரஸ்ஸல்ஸில் நடந்த பேச்சுவார்த்தையின் போது தெரசா அம்மையார் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளால் ஏளனப்படுத்தப்பட்டதை மறுப்பதற்கில்லை...மறப்பதற்கும் இல்லை. .......வெளியேறிய பின்பு வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடத்தி ஓர் உடன்பாட்டை எட்ட குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் என்ற வரையறையை ஏற்படுத்தவேண்டும் என்ற ஐரோப்பிய யூனியனின் வேண்டுகோளை நிராகரித்து, வெளியேறியதிலிருந்து ஓர் ஆண்டுக்குள் வர்த்தக உடன்படிக்கை எட்டப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அண்மையில் சட்டமே இயற்றப்பட்டுவிட்டது......ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவாக காவடி தூக்கிய தொழிலாளர் கட்சி ஏதும் செய்யமுடியாமல் அடங்கி ஒடுங்கி உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
மனு நீதி - Chennai,இந்தியா
24-ஜன-202000:40:19 IST Report Abuse
மனு நீதி 10 வருடங்கள் HSMP என்னும் ஐரோப்பியர் தவிர பிற நாடுகளை சேர்ந்த படித்தவர்கள் குடியேறுவதற்கான விசாவினை ரத்து செய்ததால் தான் இந்த பெரும் சரிவு. அமெரிக்காவும் இதில் இருந்து பாடம் கற்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X