சம்பவம் செய்தி

தமிழ்நாடு

1,000 போலி வக்கீல்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி முதல்வர் கைது

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (16)
Advertisement
lawyer,fake_lawyers,law_college,போலி_வக்கீல், சட்டக்கல்லூரி, முதல்வர், கைது

சென்னை: ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வழக்கறிஞர்கள் உருவாக காரணமாக இருந்த, ஆந்திர மாநில தனியார் சட்டக் கல்லுாரி முதல்வரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சங்கத்தின் செயலர் ராஜா குமார். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்: வில்லிவாக்கம், ராஜாஜி நகர் வேகவதி தெருவைச் சேர்ந்தவர் விபின், 59; ரயில்வே ஊழியர். இவர், ரயில்வே துறையில் பணிபுரிந்தபடி, ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள, தனியார் சட்டக் கல்லுாரியில், 2015 - 18ம் ஆண்டு வரை, எல்.எல்.பி., படித்துள்ளார்.

சட்டக் கல்லுாரி தேர்வு எழுதுவதற்கு, குறைந்தபட்சம், 70 சதவீதம் வருகை பதிவேடு கட்டாயம். விபின் ரயில்வே துறையில் பணியாற்றி வந்ததால், கல்லுாரிக்கு செல்ல முடியவில்லை.ஆனால், கல்லுாரிக்கு சென்றது போல், போலியாக வருகை பதிவேடு சான்றிதழ் பெற்று, சட்டப் படிப்பை முடித்துள்ளார்.இவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில், வழக்கறிஞராக பதிவு செய்ய விண்ணப்பித்து இருந்தார்; அதை நிராகரித்து விட்டோம்.

இதனால், விபின், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான உலகநாதன், மோகன்தாஸ் ஆகியோருக்கு, பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து, வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். 2017ல், ரயில்வே துறையில் இருந்து விருப்ப ஓய்வும் பெற்றுள்ளார். இவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து, சென்னை உயர் நீதிமன்ற காவல் நிலைய போலீசார் விசாரித்து, விபின் மற்றும் உலகநாதன், மோகன்தாஸ் ஆகியோரை கைது செய்தனர்.

பின், இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த மோசடி குறித்து, கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீசார் விசாரித்தனர். அப்போது, ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள, தனியார் சட்டக் கல்லுாரி முதல்வர் ஹிமவந்த குமார், 54, என்பவர், கல்லுாரிக்கே வராத, 1,000க்கும் மேற்பட்டோருக்கு, 80 சதவீதம் கல்லுாரிக்கு வருகை தந்தது போல பதிவேடு தயார் செய்து, சான்றிதழ் வழங்கியுள்ளார். இதற்கு, கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி இருப்பதும் தெரிய வந்தது.

இவர் வழங்கிய சான்றிதழ் வாயிலாக, 1,000க்கும் மேற்பட்ட போலி வழக்கறிஞர்கள் உருவாகி இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஹிமவந்த குமாரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், போலி சான்றிதழ்கள் வாயிலாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ள வழக்கறிஞர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
24-ஜன-202014:51:42 IST Report Abuse
s.rajagopalan இதுவே ஒரு அரசியல்வாதியாக இருந்தால் ....அரசியல் பழி வாங்கல்' என்று சொல்லி சமாளிப்பர். இன்றய ஜனநாயகத்துப் நிலை இது
Rate this:
Share this comment
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
24-ஜன-202014:48:31 IST Report Abuse
Anantharaman Srinivasan டாக்டர்கள் எப்படி தாங்கள் படித்த டிகிரிக்கு அரசின் certificate பெற்று தங்கள் clinic ல் மாட்டிவைத்து தங்களுடைய பதிவு எண்ணையும் letter pad ல் போடுகிறார்களோ அதைபோல் வக்கீல்களும் செய்யவேண்டும். மேலும் வக்கீல்கள் கட்சிக்காரனிடம் வாங்கும் பீஸ்க்கு ரசீது கொடுப்பதில்லை. பெரும்பாலான வக்கீல்கள் எதிர்கட்சி காரனிடமும் தொடர்புகொண்டு சரியாக கேஸ் நடத்தாமல் கட்ட பஞ்சாயத்து செய்யவே விரும்புகின்றனர். Court ல் case கட்டு காணாமல் போகும் சம்பவங்களும் உண்டு. இவர்களுக்கு தற்பாதுகாப்பு போர்வை அரசியல்கட்சிகள்.. மொத்தத்தில் நீதித்துறை நீதி மறுக்கப்படும் துறையாக மாறிவிட்டது...
Rate this:
Share this comment
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
24-ஜன-202013:08:36 IST Report Abuse
S.P. Barucha சட்ட மேதை சட்டக் கல்லுாரி முதல்வர் ஹிமவந்த குமார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X