பொது செய்தி

தமிழ்நாடு

டிசம்பரில் தான் சனிப்பெயர்ச்சி: திருநள்ளார் கோவில் அறிவிப்பு

Added : ஜன 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 டிசம்பரில் தான் சனிப்பெயர்ச்சி: திருநள்ளார் கோவில் அறிவிப்பு

காரைக்கால் : 'திருநள்ளார் சனிப்பெயர்ச்சி விழா குறித்த தகவல்களை பக்தர்கள் நம்ப வேண்டாம்; டிச., 27ல் தான் சனிப்பெயர்ச்சி நடக்கிறது' என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி, காரைக்கால், திருநள்ளாறில், பிரசித்தி பெற்ற தர்பாரண் யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, சனீஸ்வர பகவான், தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். சனி பரிகார ஸ்தலமான இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதியில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர். இங்கு, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்நிலையில், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், இன்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதாக, தகவல் பரவி வருகிறது. இதை, கோவில் நிர்வாகம் மறுத்துள்ளது.

கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ், வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருநள்ளாறு கோவிலில், சனிப்பெயர்ச்சி விழாக்கள் அனைத்தும், அசல் சுத்த வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படியே நடத்தப்பட்டு வருகிறது. கடந்த முறை, சனிப்பெயர்ச்சி விழா, 2017, டிச., 19ல், நடந்தது.அடுத்த சனிப்பெயர்ச்சி விழா, வரும் டிச., 27 அதிகாலை, 5:22 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே, பக்தர்கள், வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


குச்சனுார்:


தேனி, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில், இன்று சனிப்பெயர்ச்சி விழா நடக்க உள்ளதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.பக்தர்கள், கோவில் நிர்வாகத்தையும், அர்ச்சகர்களையும் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.இதையடுத்து,'டிச., 27ல் தான் சனிப்பெயர்ச்சி விழா'என, கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கோவில் உதவி அர்ச்சகர் சிவக்குமார் கூறுகையில், ''திருக்கணித பஞ்சாங்க முறையில், ஜன., 24ல் சனிப்பெயர்ச்சி எனக் கூறுகின்றனர். வாக்கிய பஞ்சாங்க முறையில், டிச., 27 ஞாயிறு அதிகாலை, 5:22 மணிக்கு, தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு, சனி பகவான் பெயர்ச்சியாகிறார். அன்று தான், கோவில்களில் சனிப்பெயர்ச்சி விழா நடக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manis - doha,கத்தார்
25-ஜன-202009:17:46 IST Report Abuse
manis ஐயகோ இவனுங்க பண்ற அளப்பறையில் சனி பகவானே குழம்பிட்டார் போல
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
25-ஜன-202005:35:15 IST Report Abuse
meenakshisundaram இதெல்லாம் தமிழனுக்கு அனாவசியம் ,ஏற்கனவே தமிழ் நாட்டை பல 'சனி'கள் பிடிச்சுக்கிட்டாச்சு விடவே போறதில்லே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X